வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாசா பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா , நெல்லியடி மத்திய கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.
மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டு அலகு பிரதி பணிப்பாளர் லாகினி நிருபராஜ், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரட்ணம், மூத்த கலைஞர்களான கந்தன் பாலன், சிவகுரு பேரின்பநாயகி, பிரதேச கலாசார பேரவை உப தலைவரும் விரிவுரையாளருமான வேல்நந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
வரவேற்புரையினை பிரதி பிரதேச செயலர் சிவகாமி உமாகாந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து தலமையுரையினை பிரதேச செயலர் உமாமகள் மணிவண்ணன் நிகழ்த்தினார்.
கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்களது அரங்க திறப்புரையினை கிளிநொச்சி குமாரசாமிபுரம் பாடசாலை அதிபர் மா.செல்வதாஸ் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து விக்னா இசை மன்ற கலைஞர்களின் இசைக்கச்சேரியும், சதாபொன்ஸ் அஸ்விகா நடனாலய மாணவர்களின் ஒயிலாட்டமும், அமிர்தவாகினி இசைமன்ற மாணவர்களின் கிராமிய பாடல்களும், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கௌத்துவமும், குருசேத்திரா நடனாலய மாணவர்களின் கும்மி நடனமும், கம்பர்மலை கலாபூசணம் கந்தையா விஜயரத்தினம் கலாமன்றத்தினரின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தும் இடம் பெற்றது.
அதன்பின்னர் மிருதங்க வாத்தியக்கலைக்காக மாணிக்கம் சந்தப்பு , கூத்துக்காக முருகன் சிவபாதசுந்தரம் , உடுக்கு வாத்தியக்கலைக்காக நாகமுத்து முத்துராசா , நாடகத்திற்க்காக சீனியன் ஆறுமுகம் ஆகியோருக்கு கலை ஞான வாருதி விருதுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இலக்கியத்திற்காக பொன்னம்பலம் சுகந்தன், இசை மற்றும் வாய்ப்பாட்டுக்காக ஜெயபாரதி கௌசிகன், சிவபாதராசா மோகன்ராஜ் , இலக்கியத்திற்க்காக சின்னராசா உதயகுமார் ஆகியோருக்கு கலைவாருதி விருதுகளும், கவிதைக்காக மார்க்கண்டு செல்வதாஸ், ஹார்மோனியம் கீபோட் வாத்தியக்கலைக்காக மதியுகங்கன் மனுசங்கர் ஆகியோருக்கு இளங்கலைர் விருதுகளையும் வழங்கி வைத்தனர்.
வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு பெருவிழா. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாசா பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா , நெல்லியடி மத்திய கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டு அலகு பிரதி பணிப்பாளர் லாகினி நிருபராஜ், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரட்ணம், மூத்த கலைஞர்களான கந்தன் பாலன், சிவகுரு பேரின்பநாயகி, பிரதேச கலாசார பேரவை உப தலைவரும் விரிவுரையாளருமான வேல்நந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். வரவேற்புரையினை பிரதி பிரதேச செயலர் சிவகாமி உமாகாந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து தலமையுரையினை பிரதேச செயலர் உமாமகள் மணிவண்ணன் நிகழ்த்தினார்.கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்களது அரங்க திறப்புரையினை கிளிநொச்சி குமாரசாமிபுரம் பாடசாலை அதிபர் மா.செல்வதாஸ் நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து விக்னா இசை மன்ற கலைஞர்களின் இசைக்கச்சேரியும், சதாபொன்ஸ் அஸ்விகா நடனாலய மாணவர்களின் ஒயிலாட்டமும், அமிர்தவாகினி இசைமன்ற மாணவர்களின் கிராமிய பாடல்களும், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கௌத்துவமும், குருசேத்திரா நடனாலய மாணவர்களின் கும்மி நடனமும், கம்பர்மலை கலாபூசணம் கந்தையா விஜயரத்தினம் கலாமன்றத்தினரின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தும் இடம் பெற்றது. அதன்பின்னர் மிருதங்க வாத்தியக்கலைக்காக மாணிக்கம் சந்தப்பு , கூத்துக்காக முருகன் சிவபாதசுந்தரம் , உடுக்கு வாத்தியக்கலைக்காக நாகமுத்து முத்துராசா , நாடகத்திற்க்காக சீனியன் ஆறுமுகம் ஆகியோருக்கு கலை ஞான வாருதி விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இலக்கியத்திற்காக பொன்னம்பலம் சுகந்தன், இசை மற்றும் வாய்ப்பாட்டுக்காக ஜெயபாரதி கௌசிகன், சிவபாதராசா மோகன்ராஜ் , இலக்கியத்திற்க்காக சின்னராசா உதயகுமார் ஆகியோருக்கு கலைவாருதி விருதுகளும், கவிதைக்காக மார்க்கண்டு செல்வதாஸ், ஹார்மோனியம் கீபோட் வாத்தியக்கலைக்காக மதியுகங்கன் மனுசங்கர் ஆகியோருக்கு இளங்கலைர் விருதுகளையும் வழங்கி வைத்தனர்.