• Nov 23 2024

வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் நாளை...!

Tamil nila / Sep 1st 2024, 3:38 pm
image

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் நாளை காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது.

குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார்  கண்ணன் குருக்கள் தலமையில் மற்றும் சிவாச்சாரியார் இணைந்து கிரியைகளை நடாத்தவுள்ளனர்.

நாளை ஆரம்பமாகும் கொடியேற்ற திருவிழாவில் ஆறாம் திருவிழா வரை காலை மாலை சிறப்பு அபிசேட  பூசைகள் இடம் பெற்று 7 ம் திருவிழாவான 08/09/2024 அன்று வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதி வரவுள்ளார்.

தொடர்ந்து 8 ம் திருவிழாவான 09/09/2024 அன்று குருக்கட்டு பிள்ளையார் திருவிழாவும், 9 ம் திருவிழாவான 10/09/2024 அன்று வெண்ணைத் திருவிழாவும், 10 ம் திருவிழாவான 11/09/2024 அன்று துகில் திருவிழாவும், 11 ம் திருவிளாவான 12/09/2024 அன்று  பாம்புத்திருவிழாவும், 12 ம் திருவிழாவான 13/09/2024 அன்று கம்சவத திருவிழாவும், 13 ம் திருவிழாவான 14/09/2024 அன்று  வேட்டைத்திருவிழாவும், 14 ம் திருவிழாவான 15/09/2024 அன்று சப்பறத்திருவிழாவும், 15 ம் திருவிழாவான 16/09/2024 அன்று தேர்த்திருவிழாவும், 16. ம் திருவிழாவான சமுத்திர திருவிழா 17/09/2024 அன்றும் இடம் பெறவுள்ளதுடன், மறுநாள் 17 ம் திருவிழாவாக கேணித்தீர்த்தமும், இடம் பெறவுள்ளன.

திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் சைவ சமய முறைப்படி திருவிழாவில் கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேசசபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலீஸாரும், மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து ஏனைய வசதிகளும் சம்மந்தப்பட்ட தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் நாளை. வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் நாளை காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது.குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார்  கண்ணன் குருக்கள் தலமையில் மற்றும் சிவாச்சாரியார் இணைந்து கிரியைகளை நடாத்தவுள்ளனர்.நாளை ஆரம்பமாகும் கொடியேற்ற திருவிழாவில் ஆறாம் திருவிழா வரை காலை மாலை சிறப்பு அபிசேட  பூசைகள் இடம் பெற்று 7 ம் திருவிழாவான 08/09/2024 அன்று வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதி வரவுள்ளார்.தொடர்ந்து 8 ம் திருவிழாவான 09/09/2024 அன்று குருக்கட்டு பிள்ளையார் திருவிழாவும், 9 ம் திருவிழாவான 10/09/2024 அன்று வெண்ணைத் திருவிழாவும், 10 ம் திருவிழாவான 11/09/2024 அன்று துகில் திருவிழாவும், 11 ம் திருவிளாவான 12/09/2024 அன்று  பாம்புத்திருவிழாவும், 12 ம் திருவிழாவான 13/09/2024 அன்று கம்சவத திருவிழாவும், 13 ம் திருவிழாவான 14/09/2024 அன்று  வேட்டைத்திருவிழாவும், 14 ம் திருவிழாவான 15/09/2024 அன்று சப்பறத்திருவிழாவும், 15 ம் திருவிழாவான 16/09/2024 அன்று தேர்த்திருவிழாவும், 16. ம் திருவிழாவான சமுத்திர திருவிழா 17/09/2024 அன்றும் இடம் பெறவுள்ளதுடன், மறுநாள் 17 ம் திருவிழாவாக கேணித்தீர்த்தமும், இடம் பெறவுள்ளன.திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் சைவ சமய முறைப்படி திருவிழாவில் கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேசசபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலீஸாரும், மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து ஏனைய வசதிகளும் சம்மந்தப்பட்ட தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement