பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் இன்று (11) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சட்டமூலம் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், கோரமின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த சட்டமூலம் இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தானும் சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இடையூறு விளைவித்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று மீண்டும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் samugammedia பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் இன்று (11) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.சட்டமூலம் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், கோரமின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.குறித்த சட்டமூலம் இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தானும் சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இடையூறு விளைவித்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.