2024ஆம் ஆண்டு சிறந்த அறிவியல் புனைகதைக்கான சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற, ஜனகா நீக்கிலாஸ் எழுதிய 'வனமெல்லாம் புதிர்' நூலின் அறிமுக நிகழ்வு கடந்த வாரம் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டுக் கழக இலங்கைக் கிளையின் தலைவர் அருணாசலம் சத்தியானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதற்பிரதியை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பெற்றுக்கொண்டதுடன், நூல் அறிமுக உரைகளை யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா மற்றும் படைப்பாளியும் சமூக செயற்பாட்டாளருமான வெற்றிச்செல்வி (சந்திரகலா) ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்போடு நடைபெற்ற இந்நிகழ்வில், போர்க்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை அடையாளப்படுத்தும் வகையில் மங்கல விளக்கிற்குப் பிரதியீடாக குப்பி விளக்குகள் ஏற்றப்பட்டது பலரதும் கவனத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
'வனமெல்லாம் புதிர்' நூல் அறிமுக நிகழ்வு 2024ஆம் ஆண்டு சிறந்த அறிவியல் புனைகதைக்கான சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற, ஜனகா நீக்கிலாஸ் எழுதிய 'வனமெல்லாம் புதிர்' நூலின் அறிமுக நிகழ்வு கடந்த வாரம் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.உலகத் தமிழ் பண்பாட்டுக் கழக இலங்கைக் கிளையின் தலைவர் அருணாசலம் சத்தியானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதற்பிரதியை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பெற்றுக்கொண்டதுடன், நூல் அறிமுக உரைகளை யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா மற்றும் படைப்பாளியும் சமூக செயற்பாட்டாளருமான வெற்றிச்செல்வி (சந்திரகலா) ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்போடு நடைபெற்ற இந்நிகழ்வில், போர்க்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை அடையாளப்படுத்தும் வகையில் மங்கல விளக்கிற்குப் பிரதியீடாக குப்பி விளக்குகள் ஏற்றப்பட்டது பலரதும் கவனத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது