• Apr 16 2026

அரச அலுவலகங்களில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

Chithra / Feb 4th 2026, 9:33 am
image


78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்  இன்று கல்முனை பிரதேச  செயலகத்தில்  பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது.


இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


தொடர்ந்து   நாட்டுக்காக உயிர் நீத்த  முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும்  நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


அத்துடன் பிரதேச செயலாளர் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.




இதேவேளை 78 சுதந்திர தின  நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.   


குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டது

  


அரச அலுவலகங்களில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்  இன்று கல்முனை பிரதேச  செயலகத்தில்  பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது.இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.தொடர்ந்து   நாட்டுக்காக உயிர் நீத்த  முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும்  நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அத்துடன் பிரதேச செயலாளர் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.இதேவேளை 78 சுதந்திர தின  நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.   குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டது  

Advertisement

Advertisement

Advertisement