• Sep 19 2024

வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டுவிழா ஆரம்பம்!SamugamMedia

Sharmi / Feb 20th 2023, 4:58 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை கொண்டாடும் முகமாக 200 வது ஆண்டு பொறிக்கப்பட்ட கேக் ஒன்றையும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வெட்டி வைத்தார்.

மேலும், கல்லூரியின் அதிபரால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கான வலைத்தளம் ஒன்றும் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்லூரியின் விக்னல் மெமோரியல் மைதானத்தில் கல்லூரியின் 200ஆவது ஆண்டிற்கான விசேட சின்னம் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வண.பத்ம தயாளனால் திரைநீக்கம் செய்யப்பட்டது.

சமநேரத்தில் பட்டாசுகள் வெடித்து ,கல்லூரியின் வர்ணம் தாங்கிய பலூன்களும் ஆகாயத்தில் பறக்க விடப்பட்டன.

இதனை தொடர்ந்து 200 ஆவது ஆண்டிற்கான ஜேர்சி ,சொக்ஸ் மற்றும் கல்லூரியின் நாட்காட்டியும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது தென்னிந்திய திருச்சபையின் பேராயர், அங்கெலிக்கன் திருச்சபையின் தலைவர், மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் , யாழ் மாவட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள்,பெற்றோர்கள் என  என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டுவிழா ஆரம்பம்SamugamMedia வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வாக வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை கொண்டாடும் முகமாக 200 வது ஆண்டு பொறிக்கப்பட்ட கேக் ஒன்றையும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வெட்டி வைத்தார்.மேலும், கல்லூரியின் அதிபரால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கான வலைத்தளம் ஒன்றும் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.தொடர்ச்சியாக 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்லூரியின் விக்னல் மெமோரியல் மைதானத்தில் கல்லூரியின் 200ஆவது ஆண்டிற்கான விசேட சின்னம் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வண.பத்ம தயாளனால் திரைநீக்கம் செய்யப்பட்டது. சமநேரத்தில் பட்டாசுகள் வெடித்து ,கல்லூரியின் வர்ணம் தாங்கிய பலூன்களும் ஆகாயத்தில் பறக்க விடப்பட்டன.இதனை தொடர்ந்து 200 ஆவது ஆண்டிற்கான ஜேர்சி ,சொக்ஸ் மற்றும் கல்லூரியின் நாட்காட்டியும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது.இதன்பொழுது தென்னிந்திய திருச்சபையின் பேராயர், அங்கெலிக்கன் திருச்சபையின் தலைவர், மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் , யாழ் மாவட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள்,பெற்றோர்கள் என  என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement