வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
முன்னதாக அதிதிகள் பிரதான வீதியில் இருந்து பான்ட் அணிவகுப்புடன் மாலை அணிவித்து வரவழைக்கப்பட்டதுடன் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது, கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பாடசாலையில் கல்வி கறறு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாகாணம், மாவட்டம், வலயம் ஆகிய மட்டஙகளில் சாதனைகளை நிலைநிறுத்திய மாணவர்கள் என 77 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு அதிதிகளால் சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுகளில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பள்ளித் தலைவர்கள், பாடசாலை அபிவிருததிச்சங்க உறுப்பினர்கள், அப பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய : சாதனையாளர் கௌரவிப்பு வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. முன்னதாக அதிதிகள் பிரதான வீதியில் இருந்து பான்ட் அணிவகுப்புடன் மாலை அணிவித்து வரவழைக்கப்பட்டதுடன் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன்போது, கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பாடசாலையில் கல்வி கறறு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாகாணம், மாவட்டம், வலயம் ஆகிய மட்டஙகளில் சாதனைகளை நிலைநிறுத்திய மாணவர்கள் என 77 பேர் கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன், தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு அதிதிகளால் சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தது.இந்நிகழ்வுகளில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பள்ளித் தலைவர்கள், பாடசாலை அபிவிருததிச்சங்க உறுப்பினர்கள், அப பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.