• Jan 07 2025

clean sri lanka வேலைத்திட்ட உறுதியுரையுடன் பணிகளை ஆரம்பித்த வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்..!

Sharmi / Jan 1st 2025, 11:39 am
image

தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் clean sri lanka வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் clean sri lanka வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன், பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத் தலைவர்களும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட clean sri lanka வேலைத்திட்டத்திற்கான உறுதியுரை அரச உத்தியோகத்தர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  



clean sri lanka வேலைத்திட்ட உறுதியுரையுடன் பணிகளை ஆரம்பித்த வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள். தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் clean sri lanka வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.அதற்கமைவாக, வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் clean sri lanka வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.முன்னதாக வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன், பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத் தலைவர்களும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட clean sri lanka வேலைத்திட்டத்திற்கான உறுதியுரை அரச உத்தியோகத்தர்கள் எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  

Advertisement

Advertisement

Advertisement