2025ம் ஆண்டின் முதலாம் நாளான இன்று (01) அரச திணைக்களங்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகளுடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் ஒரு கட்டமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் உறுதி மொழி இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சகல உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.
க்ளீன் சிறீலங்கா என்ற தேசிய வேலைத்திட்டம் புதிய தொனிப்பொருளின் கீழ் குறித்த உறுதி மொழி நிகழ்வு இம்முறை ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறித்த உறுதி மொழியின் போதான எதிர்பார்ப்பாக " நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு சமூக பொருளாதார அபிவிருத்தி நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்பார்ப்பாகும்.
க்ளீன் சிறீலங்கா என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமான கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அத்துடன் பொறுப்புக் கூறும் தொழிற்பாடாகும்.
இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதி மொழி அளிக்கின்றோம்.
குறித்த க்ளீன் சிறீலங்கா நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் : புதிய ஆண்டுக்கான கடமைகள், சத்தியப்பிரமாண நிகழ்வுகளுடன் ஆரம்பம் 2025ம் ஆண்டின் முதலாம் நாளான இன்று (01) அரச திணைக்களங்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகளுடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.இதன் ஒரு கட்டமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் உறுதி மொழி இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சகல உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.க்ளீன் சிறீலங்கா என்ற தேசிய வேலைத்திட்டம் புதிய தொனிப்பொருளின் கீழ் குறித்த உறுதி மொழி நிகழ்வு இம்முறை ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. குறித்த உறுதி மொழியின் போதான எதிர்பார்ப்பாக " நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு சமூக பொருளாதார அபிவிருத்தி நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்பார்ப்பாகும்.க்ளீன் சிறீலங்கா என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமான கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அத்துடன் பொறுப்புக் கூறும் தொழிற்பாடாகும்.இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதி மொழி அளிக்கின்றோம்.குறித்த க்ளீன் சிறீலங்கா நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.