வவுனியா சாலம்பைக்குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாலம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு இன்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.
நீண்ட காலமாக குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அண்டிய பகுதியில் கடந்த காலங்களில் சாலம்பைக்குளம் புதிய வீட்டு திட்டம் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்ற குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அங்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக புகைமூட்டம் கிராமத்துக்குள் வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுர்தீன், அரசாங்க அதிபர், சுற்றாடல் அதிகார சபையினர், வவுனியா மாநகர சபை ஆணையாளர், தமிழ் பிரதேச சபை தலைவர் உட்பட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு இது தொடர்பான உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா குப்பை மேட்டுபிரச்சனை:பிரதியமைச்சர் தலைமையில் ஆராய்வு வவுனியா சாலம்பைக்குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாலம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு இன்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.நீண்ட காலமாக குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அண்டிய பகுதியில் கடந்த காலங்களில் சாலம்பைக்குளம் புதிய வீட்டு திட்டம் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்ற குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அங்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக புகைமூட்டம் கிராமத்துக்குள் வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருந்தனர்.இந்நிலையில் இன்றைய தினம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுர்தீன், அரசாங்க அதிபர், சுற்றாடல் அதிகார சபையினர், வவுனியா மாநகர சபை ஆணையாளர், தமிழ் பிரதேச சபை தலைவர் உட்பட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு இது தொடர்பான உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.