• Sep 20 2024

வவுனியா சோயோ ஒழுங்கையின் வீதி திருத்தப்பணிகள் தாமதம்!!

Tamil nila / Jan 17th 2023, 7:19 am
image

Advertisement

வவுனியா சோயோ ஒழுங்கையின், வீதி திருத்தப்பணிகள் மிகதாமதமாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 


சோயோ வீதியை செப்பனிட்டு தருமாறு பல தடவை நகரசபையிடம் கோரிய போதிலும் நகரசபை அசமந்தமாக இருந்ததுடன் கடந்த மூன்று கிழமைகளுக்கு முன்னர் பணிகளை ஆரம்பித்திருந்தது. 



இந் நிலையில் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் 30 மீற்றர் வீதியே செப்பனிடப்பட்டுள்ளதுடன் செப்பனிடப்பட்ட வீதியும் பள்ளம் மேடாக காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.


வீதியை சீராக செப்பனிட வேண்டும் என்ற சிந்தனையிலாமல் கனரக வாகனத்தினூடாக பழைய வீதியை கிளறியதன் பின்னர் அதன் மேல் சிறிதளவு கற்களே போட்டு தார் ஊற்றுகின்றனர். இது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்காது. எமது வட்டார உற்ப்பினர்கள் இது தொடர்பில் அக்கறையில்லை என தெரிவித்ததுடன் தமது வட்டாரத்தில் நகரசபை தலைவர் உட்பட தமிழரசுக்கட்சியை சேர்ந்த 2 நகரசபை உறுப்பினர்கள் உள்ள போதிலும் இதுவரை செப்பனிடப்படாத வீதியை தற்போதேனும் சீராக செப்பனிட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 


வவுனியா சோயோ ஒழுங்கையின் வீதி திருத்தப்பணிகள் தாமதம் வவுனியா சோயோ ஒழுங்கையின், வீதி திருத்தப்பணிகள் மிகதாமதமாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சோயோ வீதியை செப்பனிட்டு தருமாறு பல தடவை நகரசபையிடம் கோரிய போதிலும் நகரசபை அசமந்தமாக இருந்ததுடன் கடந்த மூன்று கிழமைகளுக்கு முன்னர் பணிகளை ஆரம்பித்திருந்தது. இந் நிலையில் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் 30 மீற்றர் வீதியே செப்பனிடப்பட்டுள்ளதுடன் செப்பனிடப்பட்ட வீதியும் பள்ளம் மேடாக காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.வீதியை சீராக செப்பனிட வேண்டும் என்ற சிந்தனையிலாமல் கனரக வாகனத்தினூடாக பழைய வீதியை கிளறியதன் பின்னர் அதன் மேல் சிறிதளவு கற்களே போட்டு தார் ஊற்றுகின்றனர். இது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்காது. எமது வட்டார உற்ப்பினர்கள் இது தொடர்பில் அக்கறையில்லை என தெரிவித்ததுடன் தமது வட்டாரத்தில் நகரசபை தலைவர் உட்பட தமிழரசுக்கட்சியை சேர்ந்த 2 நகரசபை உறுப்பினர்கள் உள்ள போதிலும் இதுவரை செப்பனிடப்படாத வீதியை தற்போதேனும் சீராக செப்பனிட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement