• May 09 2026

த.வெ.க விற்கு வி.சி.கவும் ஆதரவு; 118 ஆக உயர்ந்த பெரும்பான்மை!

shanu / May 9th 2026, 5:19 pm
image

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. 


சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். 


இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார். 


திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா  ஊடகங்களிடம் பகிர்ந்தார். 

அதன்போது அவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், 


தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் த.வெ.க விற்கு வி.சி.க. ஆதரவு  வழங்கியதால்  த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்துள்ளது.


வி.சி.க.வின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கும் த.வெ.க. தலைவர் விஜய், அதன் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

த.வெ.க விற்கு வி.சி.கவும் ஆதரவு; 118 ஆக உயர்ந்த பெரும்பான்மை தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார். திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா  ஊடகங்களிடம் பகிர்ந்தார். அதன்போது அவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் த.வெ.க விற்கு வி.சி.க. ஆதரவு  வழங்கியதால்  த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்துள்ளது.வி.சி.க.வின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கும் த.வெ.க. தலைவர் விஜய், அதன் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement