• Dec 09 2024

வீரமுனை வரவேற்பு வீதி வளைவு விவகாரம்...!சம்மாந்துறையில் உயர்மட்ட கூட்டம்...!

Sharmi / Jul 3rd 2024, 10:06 am
image

வீரமுனை ஆண்டியடிச் சந்தி வரவேற்பு வீதி வளைவு  (கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை தனக்கு அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைவாக,நேற்றையதினம் (02)சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் உயர்மட்ட  கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை,வீதி அபிவிருத்தி திணைக்களம்,நீர்ப்பாசனத் திணைக்களம்,நகர அபிவிருத்தி அதிகார சபை,பிரதேச சபை,நில அளவைத் திணைக்களம்,பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்,கிராம சேவகர்கள் உட்பட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, குறித்த வரவேற்பு வீதி வளைவு(கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக  தனக்கு சாத்தியவள அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வீரமுனை வரவேற்பு வீதி வளைவு விவகாரம்.சம்மாந்துறையில் உயர்மட்ட கூட்டம். வீரமுனை ஆண்டியடிச் சந்தி வரவேற்பு வீதி வளைவு  (கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை தனக்கு அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.அதற்கமைவாக,நேற்றையதினம் (02)சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் உயர்மட்ட  கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை,வீதி அபிவிருத்தி திணைக்களம்,நீர்ப்பாசனத் திணைக்களம்,நகர அபிவிருத்தி அதிகார சபை,பிரதேச சபை,நில அளவைத் திணைக்களம்,பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்,கிராம சேவகர்கள் உட்பட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.அதேவேளை, குறித்த வரவேற்பு வீதி வளைவு(கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக  தனக்கு சாத்தியவள அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement