இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கந்தளாயில் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பு நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை மற்றும் தேஷிய (National Unity and Deshiya) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அணிவகுப்பு, கந்தளாய் வெலிங்டன் சந்தியிலிருந்து ஆரம்பமாகி மணிக்கூண்டு கோபுரம் வரை சென்றடைந்தது.
இன, மத பேதமின்றி மக்களிடையே ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதியை உருவாக்குவதே இந்த பேரணியின் பிரதான நோக்கமாக அமைந்தது.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதுடன், மதுரசா மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு உற்சாகமாக கலந்துகொண்டனர்.
மதத்தலைவர்களும் இதில் பங்கேற்று, சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். “நாட்டின் எதிர்காலம் அனைத்து மக்களும் ஒன்றிணைவதிலேயே தங்கியுள்ளது” என்ற செய்தியை இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றது.
கந்தளாயில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாகன அணிவகுப்பு இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கந்தளாயில் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பு நடைபெற்றது.தேசிய ஒற்றுமை மற்றும் தேஷிய (National Unity and Deshiya) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அணிவகுப்பு, கந்தளாய் வெலிங்டன் சந்தியிலிருந்து ஆரம்பமாகி மணிக்கூண்டு கோபுரம் வரை சென்றடைந்தது.இன, மத பேதமின்றி மக்களிடையே ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதியை உருவாக்குவதே இந்த பேரணியின் பிரதான நோக்கமாக அமைந்தது. மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதுடன், மதுரசா மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு உற்சாகமாக கலந்துகொண்டனர்.மதத்தலைவர்களும் இதில் பங்கேற்று, சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். “நாட்டின் எதிர்காலம் அனைத்து மக்களும் ஒன்றிணைவதிலேயே தங்கியுள்ளது” என்ற செய்தியை இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றது.