அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து உதய கம்மன்பிலவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கிற்குச் (Brian Shaddick) சொந்தமான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து, 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாகக் கூறி உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் தற்போது உதய கம்மன்பில குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
உதய கம்மன்பிலவுக்கு எதிரான 21 மில்லியன் ரூபாய் மோசடி வழக்கில் தீர்ப்பு அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.நீண்டகாலமாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.தீர்ப்பை அறிவித்த நீதிபதி, உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில், குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து உதய கம்மன்பிலவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கிற்குச் (Brian Shaddick) சொந்தமான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து, 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாகக் கூறி உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் தற்போது உதய கம்மன்பில குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.