• Jun 16 2024

தமிழ் பக்தி பாடல்களுடன் முல்லைத்தீவில் களைகட்டிய வெசாக் தின கொண்டாட்டம்...!

Sharmi / May 23rd 2024, 10:08 pm
image

Advertisement

பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தின நிகழ்வுகள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்  இன்றையதினம்(23) ஆரம்பமானது.

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 59 வது காலாட் படையினரின் ஏற்பாட்டில்  புதுக்குடியிருப்பு பிரதேசசபை  மைதானத்தில்  இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வரலாற்று கதைகள் வெளிச்ச வீடுகளில் தமிழ் மொழியில் ஒலி மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, சில வெளிச்ச வீடுகளில் ஞானம் பெறும் நிலையில் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தது. 

குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் சாதி, மதம், இன  வேறுபாடு கடந்து  சிறுவர்கள், பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, வெசாக் தினத்தினை முன்னிட்டு  இன்றும், நாளையும் (24)  புதுக்குடியிருப்பு பிரதேசசபை  மைதானத்தில் உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



தமிழ் பக்தி பாடல்களுடன் முல்லைத்தீவில் களைகட்டிய வெசாக் தின கொண்டாட்டம். பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தின நிகழ்வுகள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்  இன்றையதினம்(23) ஆரம்பமானது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 59 வது காலாட் படையினரின் ஏற்பாட்டில்  புதுக்குடியிருப்பு பிரதேசசபை  மைதானத்தில்  இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வரலாற்று கதைகள் வெளிச்ச வீடுகளில் தமிழ் மொழியில் ஒலி மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, சில வெளிச்ச வீடுகளில் ஞானம் பெறும் நிலையில் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தது. குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் சாதி, மதம், இன  வேறுபாடு கடந்து  சிறுவர்கள், பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.அதேவேளை, வெசாக் தினத்தினை முன்னிட்டு  இன்றும், நாளையும் (24)  புதுக்குடியிருப்பு பிரதேசசபை  மைதானத்தில் உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement