• Oct 23 2024

இராணுவத்திற்கு எதிராக பரவும் வீடியோக்கள் - பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வெளியான கடும் கண்டனம்

Chithra / Oct 23rd 2024, 12:43 pm
image

Advertisement


நாட்டில் கடந்த சில நாட்களாக இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில சமூக வலைதள ஆர்வலர்களால் பொய்யான தகவல் அடங்கி வீடியோக்களை வெளியிட்டுவருவதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

இராணுவத்தில் சிறப்பான எதிர்காலம் அற்ற உறுப்பினர்கள் சிலரினால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களை முறையாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் சமூக வலைதள ஆர்வலர்கள் தங்களது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் குறுகிய நோக்கத்திற்காக இந்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். 

இந்த வீடியோக்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,

இராணுவ முகாம்களின் படையினரை புதிய இடங்களில் நிலைநிறுத்துவது குறுகிய கால முடிவு அல்ல என்பதுடன் இது இராணுவத்தின் பொருத்தப்பாடு மற்றும் அளவுபரிமான ஒழுங்கமைக்கும் நீண்ட கால செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகும். 

மேலும், இராணுவத்தின் கட்டளை மற்றும் நிர்வாகம், முப்படைகளின் சேனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்படி, பொறுப்பற்ற சிலரின் சுய இலாபங்களுக்காக ஊடக நெறிமுறைகளுக்கு மாறாக பொய்யான தகவல்களைப் பரப்பி, இலங்கை இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நீண்டகால நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சாத்தியபாடற்ற முயற்சியாக இவ்வாறான செயல்களைச் சுட்டிக்காட்டுவதுடன் இதனால் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு சிலரின் இத்தகைய பொய்யான மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகளை இராணுவம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று சுட்டுக்காட்டியுள்ளார்.

இராணுவத்திற்கு எதிராக பரவும் வீடியோக்கள் - பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வெளியான கடும் கண்டனம் நாட்டில் கடந்த சில நாட்களாக இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில சமூக வலைதள ஆர்வலர்களால் பொய்யான தகவல் அடங்கி வீடியோக்களை வெளியிட்டுவருவதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இராணுவத்தில் சிறப்பான எதிர்காலம் அற்ற உறுப்பினர்கள் சிலரினால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களை முறையாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் சமூக வலைதள ஆர்வலர்கள் தங்களது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் குறுகிய நோக்கத்திற்காக இந்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோக்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,இராணுவ முகாம்களின் படையினரை புதிய இடங்களில் நிலைநிறுத்துவது குறுகிய கால முடிவு அல்ல என்பதுடன் இது இராணுவத்தின் பொருத்தப்பாடு மற்றும் அளவுபரிமான ஒழுங்கமைக்கும் நீண்ட கால செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இராணுவத்தின் கட்டளை மற்றும் நிர்வாகம், முப்படைகளின் சேனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.இதன்படி, பொறுப்பற்ற சிலரின் சுய இலாபங்களுக்காக ஊடக நெறிமுறைகளுக்கு மாறாக பொய்யான தகவல்களைப் பரப்பி, இலங்கை இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நீண்டகால நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சாத்தியபாடற்ற முயற்சியாக இவ்வாறான செயல்களைச் சுட்டிக்காட்டுவதுடன் இதனால் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஒரு சிலரின் இத்தகைய பொய்யான மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகளை இராணுவம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று சுட்டுக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement