• Feb 21 2025

உலகம் முழுவதும் பரவும் இலங்கை சிறுவர்களின் தகாத வீடியோக்கள் - அமெரிக்காவில் முறைப்பாடு

Chithra / Feb 19th 2025, 12:10 pm
image

 

இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரச நிறுவனம் ஒன்று முறைப்பாடு செய்துள்ளது.

பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்காக செயல்படும் அமெரிக்க அரசாங்கத்தின் NCMEC நிறுவனம் மூலம் குறித்த முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவும் இலங்கை சிறுவர்களின் தகாத வீடியோக்கள் - அமெரிக்காவில் முறைப்பாடு  இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரச நிறுவனம் ஒன்று முறைப்பாடு செய்துள்ளது.பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.குழந்தைகளுக்காக செயல்படும் அமெரிக்க அரசாங்கத்தின் NCMEC நிறுவனம் மூலம் குறித்த முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளார்.இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement