உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம்(05) புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாராம்பரிய மீன்பிடி தொழிலை அழிக்காதே, சாராயம் குடிப்பதற்கு மண் வளத்தை அழிக்காதே , தொழிலாளர்களுக்கே மீன்பிடி அமைச்சு முதாலாளிமார்களுக்கு அல்ல என சுலோகங்கள் தாங்கிய அட்டைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிராக புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டம். உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம்(05) புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாராம்பரிய மீன்பிடி தொழிலை அழிக்காதே, சாராயம் குடிப்பதற்கு மண் வளத்தை அழிக்காதே , தொழிலாளர்களுக்கே மீன்பிடி அமைச்சு முதாலாளிமார்களுக்கு அல்ல என சுலோகங்கள் தாங்கிய அட்டைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.