• Nov 23 2024

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - நகை மற்றும் பணம் திருட்டு...!

Anaath / Jun 13th 2024, 7:14 pm
image

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டத்துடன் அந்த  வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் அந்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டு கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டில் இருந்த இரண்டு இலட்சத்து பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுண் சங்கிலி மற்றும் இரண்டு பவுண் காப்பு என்பவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் 

அதன் பின்னர் அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார்  அயல் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை  பார்வையிட்டுக்கொண்டு இருந்தவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்திருந்தார். இதன்போது  பொலிஸார் அவரை கைது செய்தனர்.

அத்துடன் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - நகை மற்றும் பணம் திருட்டு. வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டத்துடன் அந்த  வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் அந்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டு கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டில் இருந்த இரண்டு இலட்சத்து பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுண் சங்கிலி மற்றும் இரண்டு பவுண் காப்பு என்பவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் அதன் பின்னர் அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார்  அயல் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை  பார்வையிட்டுக்கொண்டு இருந்தவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்திருந்தார். இதன்போது  பொலிஸார் அவரை கைது செய்தனர்.அத்துடன் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement