• Sep 20 2024

மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பினருக்கான தொழிற் பயிற்சி வழங்கி வைப்பு!samugammedia

Sharmi / Apr 3rd 2023, 3:55 pm
image

Advertisement

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்  மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு  'உறவுகளுக்கு கைகொடுப்போம் அமைப்பின்  ஏற்பாட்டில் மெழுகு சார்ந்த உற்பத்தி  பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை(02) மன்னார் மாவட்ட செயலக தொழிற்பயிற்சி அதிகாரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட தேனீ அமைப்பின் ஏற்பாட்டில்  இடம் பெற்ற குறித்த தொழிற்பயிற்சியில் இங்கை கைத்தொழில் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட்டினால்இதெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகாளுக்கான பயிற்சிகள் வழங்கிவைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் கலந்து குறித்த தொழிற்பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-இதன் போது சாதாரண மெழுகுதிரி,அலங்கார மெழுகுதிரி உற்பத்தி செய்வது தொடர்பாக அவற்றை பொதி செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது அதே நேரம் பயிற்சி பெற்றவர்கள் ஊடாக பிரதேச ரீதியாக உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பினருக்கான தொழிற் பயிற்சி வழங்கி வைப்புsamugammedia மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்  மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு  'உறவுகளுக்கு கைகொடுப்போம் அமைப்பின்  ஏற்பாட்டில் மெழுகு சார்ந்த உற்பத்தி  பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை(02) மன்னார் மாவட்ட செயலக தொழிற்பயிற்சி அதிகாரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட தேனீ அமைப்பின் ஏற்பாட்டில்  இடம் பெற்ற குறித்த தொழிற்பயிற்சியில் இங்கை கைத்தொழில் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட்டினால்இதெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகாளுக்கான பயிற்சிகள் வழங்கிவைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் கலந்து குறித்த தொழிற்பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டனர்.-இதன் போது சாதாரண மெழுகுதிரி,அலங்கார மெழுகுதிரி உற்பத்தி செய்வது தொடர்பாக அவற்றை பொதி செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது அதே நேரம் பயிற்சி பெற்றவர்கள் ஊடாக பிரதேச ரீதியாக உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement