• Nov 25 2024

போதையில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரி நடை பயணம்...! வவுனியா இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்...!

Sharmi / Jun 4th 2024, 9:28 am
image

'போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம்' என்ற தொனிப் பொருளில் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ள வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் நேற்றையதினம் (03) மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த குறித்த ரோஷன் என்கின்ற இந்த இளைஞர் தற்போது தனது உடல்நல குறைவிலிருந்து சற்று தேறிய நிலையில் இந்த நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து இந்த எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரியே குறித்த நடை பயணத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பித்த நடைபயணமானது நேற்று (03) மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது

இந்நிலையில் இன்றையதினம்(04) குறித்த நடைபயணமானது ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வழியாக ஓமந்தையை சென்றடைந்து நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

போதையில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரி நடை பயணம். வவுனியா இளைஞனின் நெகிழ்ச்சியான செயல். 'போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம்' என்ற தொனிப் பொருளில் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ள வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் நேற்றையதினம் (03) மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளார்.கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த குறித்த ரோஷன் என்கின்ற இந்த இளைஞர் தற்போது தனது உடல்நல குறைவிலிருந்து சற்று தேறிய நிலையில் இந்த நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்.அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து இந்த எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரியே குறித்த நடை பயணத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பித்த நடைபயணமானது நேற்று (03) மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளதுஇந்நிலையில் இன்றையதினம்(04) குறித்த நடைபயணமானது ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வழியாக ஓமந்தையை சென்றடைந்து நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement