கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (13) கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்தச் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இந்த வெளிநாட்டுப் பெண் மற்றுமொரு பெண்ணுடன் குறித்த ஹோட்டலின் விசேட விருந்தினர் அறையில் தங்கியிருந்ததாகவும், அவரது பணப்பையில் இருந்த திராம் மற்றும் யூரோ பணம் (இலங்கை மதிப்பில் ரூபா 330,000) காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாத நேரத்தில் இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணத்தை ஜ-எல பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் மாற்றி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோட்டல் அறையில் மாயமான பணப்பை; இலங்கை வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்தச் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். இந்த வெளிநாட்டுப் பெண் மற்றுமொரு பெண்ணுடன் குறித்த ஹோட்டலின் விசேட விருந்தினர் அறையில் தங்கியிருந்ததாகவும், அவரது பணப்பையில் இருந்த திராம் மற்றும் யூரோ பணம் (இலங்கை மதிப்பில் ரூபா 330,000) காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாத நேரத்தில் இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணத்தை ஜ-எல பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் மாற்றி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.