• Apr 20 2026

வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இளைஞன் பலி

Chithra / Apr 20th 2026, 8:27 am
image

திருகோணமலை கப்பல்துறை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.


வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய எஸ். நிரோஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், அவருடன் பயணித்த ஜீவராணி என்பவருக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டு, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இளைஞன் பலி திருகோணமலை கப்பல்துறை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய எஸ். நிரோஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், அவருடன் பயணித்த ஜீவராணி என்பவருக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டு, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement