• Mar 10 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் - பாதுகாப்பை தீவிரப்படுத்திய துருக்கி!

shanu / Mar 9th 2026, 4:04 pm
image

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலை கருத்திற்கொண்டு, துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.


இதன்படி, வடக்கு சைப்பிரஸில் ஆறு எப்-16 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


போர் விமானங்களுடன் மேலதிக விமான பாதுகாப்பு அமைப்புகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


எமது பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் போர் - பாதுகாப்பை தீவிரப்படுத்திய துருக்கி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலை கருத்திற்கொண்டு, துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.இதன்படி, வடக்கு சைப்பிரஸில் ஆறு எப்-16 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.போர் விமானங்களுடன் மேலதிக விமான பாதுகாப்பு அமைப்புகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.எமது பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement