நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது குறித்து அவதானம் செலுத்தி, மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அந்த திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு - பிற்பகலில் இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது குறித்து அவதானம் செலுத்தி, மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அந்த திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.