• Sep 19 2024

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்! SamugamMedia

Chithra / Feb 26th 2023, 4:23 pm
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரையான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் உட்பட 26 பேருக்கு கொழும்பு வைத்தியசாலை சதுக்க வலயத்திற்குள் பிரவேசிக்க, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, இருதய வைத்தியசாலை மற்றும் மருதானை பிரதான வைத்தியசாலை சதுக்கங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய வகையில் போராட்டக்காரர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து டீன்ஸ் வீதி, சீமன்ஸ் வீதி சந்தி வரையிலான வீதி மற்றும் நடைபாதைகளை மறித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் SamugamMedia தேசிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரையான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் உட்பட 26 பேருக்கு கொழும்பு வைத்தியசாலை சதுக்க வலயத்திற்குள் பிரவேசிக்க, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, இருதய வைத்தியசாலை மற்றும் மருதானை பிரதான வைத்தியசாலை சதுக்கங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய வகையில் போராட்டக்காரர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து டீன்ஸ் வீதி, சீமன்ஸ் வீதி சந்தி வரையிலான வீதி மற்றும் நடைபாதைகளை மறித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement