• Nov 24 2024

உயரும் ஆறுகளின் நீர்மட்டம் - ஆபத்தான நிலையில் பல பகுதிகள்..!

Chithra / May 21st 2024, 9:17 am
image

 

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி, களு கங்கையின் மகுர பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்து இன்னும் உள்ளதாக தெரிவிக்கின்றது.

களு கங்கையின் மில்லகந்த பகுதியில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஜிங் கங்கையின் பத்தேகம பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நில்வலா ஆற்றின் தல்கஹகொட மற்றும் பனடுகம பகுதிகள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன.

அத்தனகலு ஓயாவின் சிறு வெள்ள நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயரும் ஆறுகளின் நீர்மட்டம் - ஆபத்தான நிலையில் பல பகுதிகள்.  தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன் படி, களு கங்கையின் மகுர பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்து இன்னும் உள்ளதாக தெரிவிக்கின்றது.களு கங்கையின் மில்லகந்த பகுதியில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஜிங் கங்கையின் பத்தேகம பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.நில்வலா ஆற்றின் தல்கஹகொட மற்றும் பனடுகம பகுதிகள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன.அத்தனகலு ஓயாவின் சிறு வெள்ள நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement