களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்து, ஹங்வெல்ல மற்றும் அருகிலுள்ள தாழ்நில பகுதிகளில் உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது.
ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் நீர் மட்டம் 9.78 மீட்டராக பதிவாகி, இது பெரும் வெள்ளப்பெருக்கான நிலையாக உருவாகி உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், நீர் மட்டம் அதிகரித்ததால் களனி நதியின் நாகலகம் வீதியில் உள்ள அளவீடு 8.35 அடியாக உயர்ந்துள்ளது.
இது வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த நிலையாகும்.
தொடர்ந்து நீர் மட்டம் அதே மட்டத்தில் காணப்படுவதாகவும், நீர் மட்டம் மேலும் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர்,
களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணையானது தற்போது திட்டமிடப்பட்ட நீர் மட்டத்தின் அதிகபட்ச உச்ச அளவை அடைந்துள்ளது.
எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடன் அறிவிக்கப்படும் என்பதால், வெள்ள அணைக்கு அருகில் வசிக்கும் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரிப்பு களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்து, ஹங்வெல்ல மற்றும் அருகிலுள்ள தாழ்நில பகுதிகளில் உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது.ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் நீர் மட்டம் 9.78 மீட்டராக பதிவாகி, இது பெரும் வெள்ளப்பெருக்கான நிலையாக உருவாகி உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். மேலும், நீர் மட்டம் அதிகரித்ததால் களனி நதியின் நாகலகம் வீதியில் உள்ள அளவீடு 8.35 அடியாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த நிலையாகும்.தொடர்ந்து நீர் மட்டம் அதே மட்டத்தில் காணப்படுவதாகவும், நீர் மட்டம் மேலும் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர், களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணையானது தற்போது திட்டமிடப்பட்ட நீர் மட்டத்தின் அதிகபட்ச உச்ச அளவை அடைந்துள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடன் அறிவிக்கப்படும் என்பதால், வெள்ள அணைக்கு அருகில் வசிக்கும் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.