• Nov 24 2024

நாங்கள் வன்முறையை விரும்புவர்கள் அல்லர்...! மக்கள் எழுச்சி மூலமே எமது இனத்தை காப்பாற்ற முடியும்...! வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டு...!

Sharmi / May 16th 2024, 1:18 pm
image

வன்முறையை நாங்கள் விரும்பவில்லை எனவும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் திணிக்கப்பட்ட அடக்கு முறையின் காரணமாக ஆயுதப்போராட்டம் ஆரம்பமானதாகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(15) நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வேலன் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களுடைய இனம் இந்த மண்ணிலே கடந்த 75 வருடங்களுக்கு மேலாக பல இனப்படுகொலைகளை சந்தித்திருக்கிறது.

அந்த இனப்படுகொலைகளிலே உச்சமாக 2009 ஆம் ஆண்டில்  முள்ளிவாய்க்காலிலே நடைபெற்றிருக்கிற இனப்படுகொலை 21 ஆம் நூற்றாண்டிலே உலகத்திலே வேறு எங்கும் நடந்திராத மிகப்பெரும் இனப்படுகொலையாக ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகளை கொன்று குவித்த ஒரு இனப்படுகொலையாக திகழ்கிறது. 

மே  12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டுக்கொண்டிருக்க கூடிய இந்த தருணத்திலே தாயகம் எங்கும் பல்வேறு இனப்படுகொலைகள் ஒவ்வொரு நாட்களுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

2009 யுத்தம்  மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு இந்த இனப்படுகொலை என்பது குறிப்பாக தமிழர்களாகிய எங்களினுடைய கலாச்சாரத்தை, எங்களினுடைய வளங்களை சுரண்டுகின்ற, நிலங்களை ஆக்கிரமிக்கின்ற,  ஏனைய நாட்டவர்களுக்கு எமது வளங்களை விற்கின்ற, இளையோரை தவறான பாதைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்  (போதைப்பொருள் பாவனையாக இருக்கலாம், அல்லது ஏனைய பாவனைகளாக இருக்கலாம்) இப்படியான தமிழின அழிப்பு இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆதியும் அந்தமும் இல்லாத தமிழ் மொழி செம்மொழிகளிலே ஒன்று. மூத்த மொழி என்று நாங்கள் அனைவரும் பெருமையோடு சொல்லக்கூடிய எங்களினுடைய தாய்மொழியாக இருக்கிறது.

தமிழர்கள் உலகத்திலே அனைத்து சமயங்களுக்கும், அனைத்து கலாச்சாரங்களும், அனைத்து பண்பாடுகளுக்கும் எந்தக் காலத்திலும் அடைக்கலம் கொடுத்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். 

நாங்கள் எந்த சமயத்துக்கோ, எந்த இனத்துக்கோ, எந்த நாட்டுக்கோ எந்த கலாச்சாரப்பண்பாட்டுக்கோ எதிரானவர்கள் அல்ல. சாந்தி, சமாதானம், நல்லிணக்கம்,  என்ற அனைத்துக்கும் உச்சமாக இந்த உலகத்திலே வாழ்ந்த இனம் தான் தமிழ் இனம். 

அதே தமிழ் இனம் தான் கப்பலோட்டிய தமிழனிலிருந்து வீரத்துக்கு விளைநிலமாக இருக்க கூடிய எங்களினுடைய தமிழ் மன்னர்களினுடைய ஆட்சிக்காலம் தொட்டு எங்களினுடைய தலைவனுடைய  வீர வரலாறு வரைக்கும் பேர் பெற்ற இனமாக இந்த தமிழினம் இருக்கிறது.

இப்படியான பெருமைகளையும் வரலாற்று சிறப்புக்களையும், நல்ல பல பண்புகளையும் அனைவரையும் நேசிக்கின்ற உத்தமமான மானிட அடிப்படை பண்புகளையும் கொண்டிருக்க கூடிய தமிழ் இனம் ஈழத்திலே எங்கே சென்று கொண்டிருக்கிறது? 

எங்களினுடைய மொழி, எங்களினுடைய கல்வி, எங்களினுடைய கலை, எங்களினுடைய கலாச்சாரம்,எங்களினுடைய பண்பாடு, எங்களினுடைய பொருளாதாரம்  எல்லாமே சிதைக்கப்பட்டு கொண்டிருக்க கூடிய நேரத்திலே எங்களினுடைய விடுதலைப் பயணம் என்பது எங்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத்தால் திணிக்கப்பட்ட அடக்கு முறையின் காரணமாக  அடிவாங்கி இயலாத கட்டத்திலே அதற்கு நாங்கள் பாதுகாக்கத்தான். ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது. 

நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல. எங்கள் மீது திணிக்கப்பட்டது வேறு வழியில்லாமல் எங்களை காப்பாற்றுவதற்கு நாங்கள் இந்த வழியை ஈற்றிலே நாட வேண்டியவர்களாக நாடித்தான் இங்கே இந்த வீர வரலாறு இங்கே நடைபெற்றது.

அதேவேளை எங்களுக்கான உரிமைகளை நாங்கள் தான் பெறவேண்டும். சிறீலங்கா அரசு எமக்கான உரிமைகளை ஒருபோதும் தரப்போவது கிடையாது. அதேவேளை நீதிக்கு புறம்பான தடையுத்தரவுகளை பெற்றுக்கொண்டு மிகவும் அடாவடித்தனமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வுகளை திருகோணமலையில் சிறீலங்கா இனப்படுகொலை அரசு தடுத்து வருகின்றது. 

தங்களுடைய உறவுகளை நினைத்து அழுவதற்கு அவர்களை நினைத்து பிரார்தனை செய்யவும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவதுடன் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களும் ஒன்றிணைந்து எழுச்சியாக இருப்பதன் மூலமே எங்களுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக போராட முடியும்.

எனவே, மக்கள் எழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும். வெறுமனே ஒருசிலர் மட்டும் போராடுவதால் பயன் ஏதும் கிடைக்க போவதில்லை. ஆகவே அனைவரும் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.




நாங்கள் வன்முறையை விரும்புவர்கள் அல்லர். மக்கள் எழுச்சி மூலமே எமது இனத்தை காப்பாற்ற முடியும். வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டு. வன்முறையை நாங்கள் விரும்பவில்லை எனவும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் திணிக்கப்பட்ட அடக்கு முறையின் காரணமாக ஆயுதப்போராட்டம் ஆரம்பமானதாகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(15) நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வேலன் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்தார்.எங்களுடைய இனம் இந்த மண்ணிலே கடந்த 75 வருடங்களுக்கு மேலாக பல இனப்படுகொலைகளை சந்தித்திருக்கிறது. அந்த இனப்படுகொலைகளிலே உச்சமாக 2009 ஆம் ஆண்டில்  முள்ளிவாய்க்காலிலே நடைபெற்றிருக்கிற இனப்படுகொலை 21 ஆம் நூற்றாண்டிலே உலகத்திலே வேறு எங்கும் நடந்திராத மிகப்பெரும் இனப்படுகொலையாக ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகளை கொன்று குவித்த ஒரு இனப்படுகொலையாக திகழ்கிறது. மே  12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டுக்கொண்டிருக்க கூடிய இந்த தருணத்திலே தாயகம் எங்கும் பல்வேறு இனப்படுகொலைகள் ஒவ்வொரு நாட்களுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2009 யுத்தம்  மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு இந்த இனப்படுகொலை என்பது குறிப்பாக தமிழர்களாகிய எங்களினுடைய கலாச்சாரத்தை, எங்களினுடைய வளங்களை சுரண்டுகின்ற, நிலங்களை ஆக்கிரமிக்கின்ற,  ஏனைய நாட்டவர்களுக்கு எமது வளங்களை விற்கின்ற, இளையோரை தவறான பாதைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்  (போதைப்பொருள் பாவனையாக இருக்கலாம், அல்லது ஏனைய பாவனைகளாக இருக்கலாம்) இப்படியான தமிழின அழிப்பு இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.ஆதியும் அந்தமும் இல்லாத தமிழ் மொழி செம்மொழிகளிலே ஒன்று. மூத்த மொழி என்று நாங்கள் அனைவரும் பெருமையோடு சொல்லக்கூடிய எங்களினுடைய தாய்மொழியாக இருக்கிறது. தமிழர்கள் உலகத்திலே அனைத்து சமயங்களுக்கும், அனைத்து கலாச்சாரங்களும், அனைத்து பண்பாடுகளுக்கும் எந்தக் காலத்திலும் அடைக்கலம் கொடுத்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். நாங்கள் எந்த சமயத்துக்கோ, எந்த இனத்துக்கோ, எந்த நாட்டுக்கோ எந்த கலாச்சாரப்பண்பாட்டுக்கோ எதிரானவர்கள் அல்ல. சாந்தி, சமாதானம், நல்லிணக்கம்,  என்ற அனைத்துக்கும் உச்சமாக இந்த உலகத்திலே வாழ்ந்த இனம் தான் தமிழ் இனம். அதே தமிழ் இனம் தான் கப்பலோட்டிய தமிழனிலிருந்து வீரத்துக்கு விளைநிலமாக இருக்க கூடிய எங்களினுடைய தமிழ் மன்னர்களினுடைய ஆட்சிக்காலம் தொட்டு எங்களினுடைய தலைவனுடைய  வீர வரலாறு வரைக்கும் பேர் பெற்ற இனமாக இந்த தமிழினம் இருக்கிறது. இப்படியான பெருமைகளையும் வரலாற்று சிறப்புக்களையும், நல்ல பல பண்புகளையும் அனைவரையும் நேசிக்கின்ற உத்தமமான மானிட அடிப்படை பண்புகளையும் கொண்டிருக்க கூடிய தமிழ் இனம் ஈழத்திலே எங்கே சென்று கொண்டிருக்கிறது எங்களினுடைய மொழி, எங்களினுடைய கல்வி, எங்களினுடைய கலை, எங்களினுடைய கலாச்சாரம்,எங்களினுடைய பண்பாடு, எங்களினுடைய பொருளாதாரம்  எல்லாமே சிதைக்கப்பட்டு கொண்டிருக்க கூடிய நேரத்திலே எங்களினுடைய விடுதலைப் பயணம் என்பது எங்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத்தால் திணிக்கப்பட்ட அடக்கு முறையின் காரணமாக  அடிவாங்கி இயலாத கட்டத்திலே அதற்கு நாங்கள் பாதுகாக்கத்தான். ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது. நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல. எங்கள் மீது திணிக்கப்பட்டது வேறு வழியில்லாமல் எங்களை காப்பாற்றுவதற்கு நாங்கள் இந்த வழியை ஈற்றிலே நாட வேண்டியவர்களாக நாடித்தான் இங்கே இந்த வீர வரலாறு இங்கே நடைபெற்றது.அதேவேளை எங்களுக்கான உரிமைகளை நாங்கள் தான் பெறவேண்டும். சிறீலங்கா அரசு எமக்கான உரிமைகளை ஒருபோதும் தரப்போவது கிடையாது. அதேவேளை நீதிக்கு புறம்பான தடையுத்தரவுகளை பெற்றுக்கொண்டு மிகவும் அடாவடித்தனமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வுகளை திருகோணமலையில் சிறீலங்கா இனப்படுகொலை அரசு தடுத்து வருகின்றது. தங்களுடைய உறவுகளை நினைத்து அழுவதற்கு அவர்களை நினைத்து பிரார்தனை செய்யவும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறானதொரு நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவதுடன் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களும் ஒன்றிணைந்து எழுச்சியாக இருப்பதன் மூலமே எங்களுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக போராட முடியும்.எனவே, மக்கள் எழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும். வெறுமனே ஒருசிலர் மட்டும் போராடுவதால் பயன் ஏதும் கிடைக்க போவதில்லை. ஆகவே அனைவரும் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement