• Jan 04 2025

உலகெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களுடன் எமது தோழமையுணர்வை இப் புத்தாண்டில் பிரகடனப்படுத்துகிறோம்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து..!

Sharmi / Jan 1st 2025, 8:43 am
image

உலகெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களுடன் எமது தோழமையுணர்வை இப் புத்தாண்டில் பிரகடனப்படுத்துகிறோம் என  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.

கடந்து சென்ற ஆண்டு உலகளாவியரீதியில் பெரிய மாற்றங்கள் எதனையும் விட்டுச் செல்லவில்லை. ஆனால் இலங்கைத்தீவில் முக்கியமான மாற்றத்தைக் கடந்த ஆண்டு பதிவு செய்து சென்றுள்ளது.

கடந்த ஆண்டு உலக அரங்கில் யுத்தங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. மக்கள் பெருந்துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தனர் ரஷ்ய- உக்ரேய்ன் யுத்தம், பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தம் முடிவுக்கு வரும் எந்த அறிகுறியும் கடந்து சென்ற ஆண்டில் வெளிப்படவில்லை. இந்த யுத்தங்கள் ஏற்படுத்திய தாக்கங்களில் ஒன்றாக சிரியாவில் அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கடந்த ஆண்டு பதிவு செய்தது. சிரிய மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டார் என்ற வகையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சாதகமாகப் பார்க்கப்பட கூடியது.

இதேவேளை இம் மாற்றம் பூகோள அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதனையும் சிரிய மக்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு முன்னர் பங்களாதேஷில் நடைபெற்ற மாணவர் போராட்டமும் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் கடந்த ஆண்டு கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்தது.

இலங்கைத் தீவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் சிறிலங்கா அரசின் ஆட்சியாளர்களில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்மை இடதுசாரிப் புரட்சியாளர்களாக வெளிப்படுத்தி இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி தோல்வியைத் தழுவி, தம்மை ஓர் அரசியல் அமைப்பாக ஒழுங்கு படுத்தி 30 வருடங்களுக்கும் மேலாக சிறிய அமைப்பாக இயங்கி வந்த மக்கள் விடுதலை முன்னணி(JVP), தன்னை தேசிய மக்கள் சக்தியாக (NPP) வடிவமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. 2022 இன் அரகலய போராட்டத்தின் விதைப்பின் விளைச்சலை, அந்த விதைப்பிற்க்கு ஒப்பீட்டளவில் குறைந்த பங்களிப்பை வழங்கிய தேசிய மக்கள் முன்னணி முழுமையாக அறுவடை செய்துள்ளது.

புதிய ஆண்டு பிறந்திருக்கும் இத் தருணத்தில் நான் பின்வரும் விடயங்களை வலியுறுத்திப் பதிவு செய்து அவற்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் புத்தாண்டுச் செய்தியாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.

1. 2025 ஆம் ஆண்டு உலகின் யுத்தங்கள் அனைத்தும் நீதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்

2. உலகின் அரசியல் ஒழுங்கு அரசுகளை மையப்படுத்தி இருக்கும் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அரசற்ற தேசங்களும் மக்களும் உலக அரசியல் ஒழுங்கின் பங்காளர்களாக மாறுவதற்கான செயற்பாடுகள் புதிய ஆண்டில் வேகப்படுத்தப்பட வேண்டும்.

3. உலகெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களுடன் எமது தோழமையுணர்வை இப் புத்தாண்டில் பிரகடனப்படுத்துகிறோம்.

4. இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம், தீவின் வடகிழக்குப் பிரதேசம் அவர்களின் பாரம்பரியத் தாயகம், அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையர்கள் என்பதற்கான அங்கீகாரம் கோரும் அரசியல் போராட்டங்கள் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் உலகமெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

5. தற்போது இலங்கைத்தீவில் ஆட்சிபீடம் ஏறியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் அமைந்த தேசிய மக்கள் சக்தி, முள்ளி வாய்க்கால் இனவழிப்பு P-Toms புரிந்துணர்வு உடன்பாட்டுச்சிதைப்பு, வட- கிழக்கு மாகாண இணைப்புத் துண்டிப்பு உட்பட தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பேரினவாதச் செயற்பாடுகளுக்கும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

6. தம் மீதான தடையை முன்னைய அரசாங்கம் அகற்றியது போல விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அகற்ற வேண்டும்.

7. சுதந்திரமான அரசியற் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபடுவதற்கான அரசியல் வெளியை உருவாக்கும் வகையில் அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டம் அகற்பப்பட வேண்டும்.

8. இலங்கைத் தீவில் தேசிய இனப்பிரச்சினை உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டு, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தாயகத்திலும் புலத்திலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

9. தமிழர் தாயகப் பகுதி, அதன் நில, கடல் வளம் குறித்த எந்த முடிவுகளும் உடன்படிக்கைகளும் தமிழ் மக்களின் சம்மதத்துடன்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. சிங்கள பேரினவாத அரசியற் கட்டமைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசின் மேலாதிக்கத்தில் நங்கூரமிட்டு நின்று தேசிய மக்கள் சக்தி கூறும் சமத்துவம் என்பது ஈழத் தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளங்களை இல்லாதொழித்து ஈழத் தமிழ் மக்களை இனக் கபளீகரம் செய்யும் பேரினவாதத் திட்டத்தின் பாற்பட்டது அல்லது துணை போகக் கூடியது என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து விழிப்பாகச் செயற்பட வேண்டும்

மலரந்துள்ள புத்தாண்டில் எமது மக்களின் சுதந்திர வேட்கையை உலகறியவும் எமது அடுத்த காலடிகளை முன்னோக்கி வைக்க உழைப்போம் என உறுதியெடுத்து மலரும் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





உலகெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களுடன் எமது தோழமையுணர்வை இப் புத்தாண்டில் பிரகடனப்படுத்துகிறோம்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து. உலகெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களுடன் எமது தோழமையுணர்வை இப் புத்தாண்டில் பிரகடனப்படுத்துகிறோம் என  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.கடந்து சென்ற ஆண்டு உலகளாவியரீதியில் பெரிய மாற்றங்கள் எதனையும் விட்டுச் செல்லவில்லை. ஆனால் இலங்கைத்தீவில் முக்கியமான மாற்றத்தைக் கடந்த ஆண்டு பதிவு செய்து சென்றுள்ளது.கடந்த ஆண்டு உலக அரங்கில் யுத்தங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. மக்கள் பெருந்துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தனர் ரஷ்ய- உக்ரேய்ன் யுத்தம், பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தம் முடிவுக்கு வரும் எந்த அறிகுறியும் கடந்து சென்ற ஆண்டில் வெளிப்படவில்லை. இந்த யுத்தங்கள் ஏற்படுத்திய தாக்கங்களில் ஒன்றாக சிரியாவில் அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கடந்த ஆண்டு பதிவு செய்தது. சிரிய மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டார் என்ற வகையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சாதகமாகப் பார்க்கப்பட கூடியது. இதேவேளை இம் மாற்றம் பூகோள அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதனையும் சிரிய மக்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு முன்னர் பங்களாதேஷில் நடைபெற்ற மாணவர் போராட்டமும் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் கடந்த ஆண்டு கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்தது.இலங்கைத் தீவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் சிறிலங்கா அரசின் ஆட்சியாளர்களில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்மை இடதுசாரிப் புரட்சியாளர்களாக வெளிப்படுத்தி இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி தோல்வியைத் தழுவி, தம்மை ஓர் அரசியல் அமைப்பாக ஒழுங்கு படுத்தி 30 வருடங்களுக்கும் மேலாக சிறிய அமைப்பாக இயங்கி வந்த மக்கள் விடுதலை முன்னணி(JVP), தன்னை தேசிய மக்கள் சக்தியாக (NPP) வடிவமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. 2022 இன் அரகலய போராட்டத்தின் விதைப்பின் விளைச்சலை, அந்த விதைப்பிற்க்கு ஒப்பீட்டளவில் குறைந்த பங்களிப்பை வழங்கிய தேசிய மக்கள் முன்னணி முழுமையாக அறுவடை செய்துள்ளது.புதிய ஆண்டு பிறந்திருக்கும் இத் தருணத்தில் நான் பின்வரும் விடயங்களை வலியுறுத்திப் பதிவு செய்து அவற்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் புத்தாண்டுச் செய்தியாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.1. 2025 ஆம் ஆண்டு உலகின் யுத்தங்கள் அனைத்தும் நீதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்2. உலகின் அரசியல் ஒழுங்கு அரசுகளை மையப்படுத்தி இருக்கும் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அரசற்ற தேசங்களும் மக்களும் உலக அரசியல் ஒழுங்கின் பங்காளர்களாக மாறுவதற்கான செயற்பாடுகள் புதிய ஆண்டில் வேகப்படுத்தப்பட வேண்டும்.3. உலகெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களுடன் எமது தோழமையுணர்வை இப் புத்தாண்டில் பிரகடனப்படுத்துகிறோம்.4. இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம், தீவின் வடகிழக்குப் பிரதேசம் அவர்களின் பாரம்பரியத் தாயகம், அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையர்கள் என்பதற்கான அங்கீகாரம் கோரும் அரசியல் போராட்டங்கள் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் உலகமெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.5. தற்போது இலங்கைத்தீவில் ஆட்சிபீடம் ஏறியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் அமைந்த தேசிய மக்கள் சக்தி, முள்ளி வாய்க்கால் இனவழிப்பு P-Toms புரிந்துணர்வு உடன்பாட்டுச்சிதைப்பு, வட- கிழக்கு மாகாண இணைப்புத் துண்டிப்பு உட்பட தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பேரினவாதச் செயற்பாடுகளுக்கும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.6. தம் மீதான தடையை முன்னைய அரசாங்கம் அகற்றியது போல விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அகற்ற வேண்டும்.7. சுதந்திரமான அரசியற் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபடுவதற்கான அரசியல் வெளியை உருவாக்கும் வகையில் அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டம் அகற்பப்பட வேண்டும்.8. இலங்கைத் தீவில் தேசிய இனப்பிரச்சினை உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டு, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தாயகத்திலும் புலத்திலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.9. தமிழர் தாயகப் பகுதி, அதன் நில, கடல் வளம் குறித்த எந்த முடிவுகளும் உடன்படிக்கைகளும் தமிழ் மக்களின் சம்மதத்துடன்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.10. சிங்கள பேரினவாத அரசியற் கட்டமைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசின் மேலாதிக்கத்தில் நங்கூரமிட்டு நின்று தேசிய மக்கள் சக்தி கூறும் சமத்துவம் என்பது ஈழத் தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளங்களை இல்லாதொழித்து ஈழத் தமிழ் மக்களை இனக் கபளீகரம் செய்யும் பேரினவாதத் திட்டத்தின் பாற்பட்டது அல்லது துணை போகக் கூடியது என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து விழிப்பாகச் செயற்பட வேண்டும்மலரந்துள்ள புத்தாண்டில் எமது மக்களின் சுதந்திர வேட்கையை உலகறியவும் எமது அடுத்த காலடிகளை முன்னோக்கி வைக்க உழைப்போம் என உறுதியெடுத்து மலரும் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement