• Jan 22 2025

அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Chithra / Jan 22nd 2025, 7:36 am
image


அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேலும் கூறியதாவது:-

"சிறைச்சாலைகளில் தற்போது குறைந்தளவு அரசியல் கைதிகளே உள்ளனர் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள். எனவே, அவர்களை இந்த அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித  ஆட்சேபனையும் இல்லை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எமது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அரசியல் கைதிகளை மிக விரைவில் விடுதலை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்றார்.  

அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேலும் கூறியதாவது:-"சிறைச்சாலைகளில் தற்போது குறைந்தளவு அரசியல் கைதிகளே உள்ளனர் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள். எனவே, அவர்களை இந்த அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித  ஆட்சேபனையும் இல்லை.அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எமது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.அரசியல் கைதிகளை மிக விரைவில் விடுதலை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement