• Nov 25 2024

ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் -ரவூப் ஹக்கீம் சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள்

Anaath / Aug 21st 2024, 1:18 pm
image

கொவிட் ஜனாஸா எரிப்பு தொடர்பில்  பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்  சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனைவிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

இன்றைய தினம் (21) பாராளுமன்றில் இடம்பெற்ற உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

விஞ்ஞான ரீதியற்ற முறையற்ற ரீதியில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டிருந்தது. அதற்காக அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருந்தது. அதனை பாராட்டுகின்றோம். அதனால் எந்த ஒரு திணைக்கள ரீதியான விசாரணையும் இடம்பெறவில்லை. எந்த ஒரு ஆதாரமும் இல்லாத  ஒரு பயங்கரமான தீர்மானம் எடுக்கப்பட்டது. 

ஆகவே முழு முஸ்லிம் சமுதாயமும் பயங்கரமாக பாதிக்கப்பட்டது. ஆகவே நான் உங்களுக்கு ஒரு கடிதம் ஒன்று எழுதியிருக்கின்றேன். சுகாதார அமைச்சில் உள்ள பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு குழு ஒன்றை அமைக்குமாறு நான் வேண்டிக்கொள்கிறேன். விஞ்ஞான முறையற்ற முறையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்க்கள் எரிக்கப்பட்டது. இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் -ரவூப் ஹக்கீம் சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் கொவிட் ஜனாஸா எரிப்பு தொடர்பில்  பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்  சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனைவிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.இன்றைய தினம் (21) பாராளுமன்றில் இடம்பெற்ற உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞான ரீதியற்ற முறையற்ற ரீதியில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டிருந்தது. அதற்காக அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருந்தது. அதனை பாராட்டுகின்றோம். அதனால் எந்த ஒரு திணைக்கள ரீதியான விசாரணையும் இடம்பெறவில்லை. எந்த ஒரு ஆதாரமும் இல்லாத  ஒரு பயங்கரமான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆகவே முழு முஸ்லிம் சமுதாயமும் பயங்கரமாக பாதிக்கப்பட்டது. ஆகவே நான் உங்களுக்கு ஒரு கடிதம் ஒன்று எழுதியிருக்கின்றேன். சுகாதார அமைச்சில் உள்ள பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு குழு ஒன்றை அமைக்குமாறு நான் வேண்டிக்கொள்கிறேன். விஞ்ஞான முறையற்ற முறையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்க்கள் எரிக்கப்பட்டது. இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement