• Mar 21 2025

கடன் பொறியிலிருந்து மீளவேண்டும், ஒன்றிணைந்து செயற்பட வாருங்கள்!- ரவி கருணாநாயக்க அழைப்பு!

Thansita / Mar 20th 2025, 7:04 pm
image

நாம் இந்த கடன் நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும். நாம் வெளிநாட்டு கையிருப்பை உழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளும் கட்சியை நோக்கி மேலும் அவர் தெரிவிக்கையில்,

சரியான திசையில் தான் பயணிக்கிறீர்கள். ஆனால் நாட்டுக்கு பொருந்தாத விடயத்தை ஏன் செய்கிறீர்கள்?  83 மற்றும்  89 களில் இதுதான் இடம்பெற்றது. 

இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு இருக்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினை இருந்தது. எனவே அவர்கள் வேறு வேறு வழிகளில் கவனம் செலுத்தினார்கள். சட்ட விரோதமாக எவ்வாறு உழைக்கலாம் எவ்வாறு அனுபவிக்கலாம் என்று பார்த்தார்கள். 

அவர்கள் பணத்தை எரிய வைத்தார்கள் அல்லது போலி நிறுவனத்தை வைத்து பணத்தை வர வைத்தார்கள். அல்லது வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்று பணத்தை கொண்டு வந்தார்கள். நாட்டை விட்டு வெளியே செல்வதனால் நீங்கள் வெளிநாட்டு கையிருப்புகளை இழந்தீர்கள்.இதனால் மில்லியன்கள் பில்லியன்கள் வேறு பக்கமாக சென்று கொண்டிருந்தது.

நாங்கள் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை.உங்களுக்கு நடைமுறை சாத்தியமான விடயங்கள் தெரியவில்லை. நீங்கள் அடிப்படையாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

தற்பொழுது விதிக்கப்பட்டிருக்கின்ற வரி  கைத்தொழிலுக்கு சாத்தியம் இல்லை  என்று தெரிவித்திருக்கிறார்கள். நாம் இந்த கடன் நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும்.

நாம் வெளிநாட்டு கையிருப்பை உழைக்க வேண்டும்.2028 வரையும் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது.எனவே நாம் ஒரு கடன் நெருக்கடியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். 

எனவே நான் எச்சரிக்கின்றேன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுவோம் என்று தெரிவித்தார்.

கடன் பொறியிலிருந்து மீளவேண்டும், ஒன்றிணைந்து செயற்பட வாருங்கள்- ரவி கருணாநாயக்க அழைப்பு நாம் இந்த கடன் நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும். நாம் வெளிநாட்டு கையிருப்பை உழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளும் கட்சியை நோக்கி மேலும் அவர் தெரிவிக்கையில்,சரியான திசையில் தான் பயணிக்கிறீர்கள். ஆனால் நாட்டுக்கு பொருந்தாத விடயத்தை ஏன் செய்கிறீர்கள்  83 மற்றும்  89 களில் இதுதான் இடம்பெற்றது. இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு இருக்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினை இருந்தது. எனவே அவர்கள் வேறு வேறு வழிகளில் கவனம் செலுத்தினார்கள். சட்ட விரோதமாக எவ்வாறு உழைக்கலாம் எவ்வாறு அனுபவிக்கலாம் என்று பார்த்தார்கள். அவர்கள் பணத்தை எரிய வைத்தார்கள் அல்லது போலி நிறுவனத்தை வைத்து பணத்தை வர வைத்தார்கள். அல்லது வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்று பணத்தை கொண்டு வந்தார்கள். நாட்டை விட்டு வெளியே செல்வதனால் நீங்கள் வெளிநாட்டு கையிருப்புகளை இழந்தீர்கள்.இதனால் மில்லியன்கள் பில்லியன்கள் வேறு பக்கமாக சென்று கொண்டிருந்தது.நாங்கள் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை.உங்களுக்கு நடைமுறை சாத்தியமான விடயங்கள் தெரியவில்லை. நீங்கள் அடிப்படையாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தற்பொழுது விதிக்கப்பட்டிருக்கின்ற வரி  கைத்தொழிலுக்கு சாத்தியம் இல்லை  என்று தெரிவித்திருக்கிறார்கள். நாம் இந்த கடன் நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும்.நாம் வெளிநாட்டு கையிருப்பை உழைக்க வேண்டும்.2028 வரையும் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது.எனவே நாம் ஒரு கடன் நெருக்கடியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். எனவே நான் எச்சரிக்கின்றேன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுவோம் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement