• Nov 26 2024

எமது நிலம் எமக்கு வேண்டும்...! கிளிநொச்சியிலிருந்து ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிவைப்பு...!

Sharmi / Mar 5th 2024, 12:53 pm
image

வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின்  காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு இன்று(05)  தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி 'நிலத்தை இழந்த மக்களின் குரல்'  எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

இராணுவம்,  வனவள திணைக்களம், வனஜீவராசி, கடற்படை, தொழிற்சாலைகள், தொல்லியல் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு  தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.

நீண்ட கால யுத்தம் காரணமாக காணி ஆவணங்களை பெற முடியாமலும், உறுதிக் காணிகளும் இவ்வாறு மேற்குறித்த தரப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் குடியிருப்புக்கள், வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை பெற்றுக்கொள்வதிலும், அபிவிருத்தி செய்வதிலும் மக்கள் நீண்ட ஆண்டுகளாக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இவற்றை விடுவித்து, தமது எதிர்கால முன்னேற்றத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

தபாலட்டைகள் நிரப்பப்பட்டு ஜெயபுரம் உப தபாலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.













எமது நிலம் எமக்கு வேண்டும். கிளிநொச்சியிலிருந்து ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிவைப்பு. வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின்  காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு இன்று(05)  தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி 'நிலத்தை இழந்த மக்களின் குரல்'  எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.இராணுவம்,  வனவள திணைக்களம், வனஜீவராசி, கடற்படை, தொழிற்சாலைகள், தொல்லியல் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு  தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.நீண்ட கால யுத்தம் காரணமாக காணி ஆவணங்களை பெற முடியாமலும், உறுதிக் காணிகளும் இவ்வாறு மேற்குறித்த தரப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் குடியிருப்புக்கள், வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை பெற்றுக்கொள்வதிலும், அபிவிருத்தி செய்வதிலும் மக்கள் நீண்ட ஆண்டுகளாக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.இவற்றை விடுவித்து, தமது எதிர்கால முன்னேற்றத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.தபாலட்டைகள் நிரப்பப்பட்டு ஜெயபுரம் உப தபாலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement