• Nov 08 2024

பொதுத் தேர்தலில் ஒரு பலமான அணியோடு நாம் மீண்டெழுவோம் - நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை!

Tamil nila / Oct 31st 2024, 9:13 pm
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் புத்தளம் மாவட்டம் பாரிய அபிவிருத்தியை அடைந்தது எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, இந்தப் பொதுத் தேர்தலில் ஒரு பலமான அணியோடு நாம் மீண்டெழுவோம் என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மதுரங்குளி – கடையாமோட்டையில் நேற்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ உட்பட புத்தளம் மாவட்ட வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் உட்பட கற்பிட்டி பிரதேசத்தில் அதிக வேலைத்திட்டங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் முன்னெடுக்கப்பட்டன.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் செய்து அந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார். இது மக்களுக்கும் நன்கு தெரியும்.

அதனால்தான் நாங்கள் இன்று உங்களிடம் தைரியமாக வந்து வாக்கு கேட்கின்றோம். உங்களில் ஒருவர், உங்களோடு எப்போதும் இருக்கக் கூடிய ஒருவர், நீங்கள் அடிக்கடி சந்திக்கக் கூடிய ஒருவரை தெரிவு செய்து எமது கட்சி ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.

அவரோடு சேர்ந்து நாங்கள் புத்தளம் மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவோம். இங்கு காணப்படும் அத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்கு முயற்சிப்போம்.

முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த கல்வியை கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம். கல்வியில் உயர்ந்தவர்களும், கல்வியை பாதியில் விடடுச் சென்றவர்களுக்கும் தொழில்வாய்பை பெறும் சூழலை உருவாக்குவோம்.

மாத்திரமின்றி, சுய தொழில் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு , மக்களின் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றிக்கு தேவையான திட்டங்களையும் அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் வழங்குவோம். மீன்பிடி மற்றும் விவசாய துறைகளை வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

இவ்வாறன நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் பலமான அணியொன்று எமக்கு தேவைப்படுகிறது. எமது கட்சியோடு இருந்து விலகியிருந்தவர்கள் இப்போது எம்மோடு இணைந்துள்ளனர்.

நாங்கள் புத்தளம் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதுபோல மக்களும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எமது கட்சி வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.

எங்களை இனவாதிகள் என்று சொல்கிறார்கள். இந்த நாடு இரண்டாக பிரிவதற்கும், பிளவுபடுவதற்கும் நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மக்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். நாட்டின் பற்றை வெளிப்படுத்தும் போது, அதற்கு இனவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இதுதான் அரசியல் கலாச்சாரம். இந்த உண்மையை சொல்லியே ஆக வேண்டும்.

நாட்டை பிரிக்கத்தான் வேண்டும் என்று சொன்னால் பொதுஜன பெரமுன இனவாதக் கூட்டம் என்கிறார்கள். நாட்டை பிரிக்க இடமளிக்க முடியாது என்று கூறும்போதும் அதற்கும் ஒரு குழு எங்களை நோக்கி இனவாதிகள் என்று விரல் நீட்டுகிறார்கள்.

நாங்கள் எந்த சமயங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. எமது கட்சியைச் சார்ந்தவர்கள், எமக்கு வாக்களிக்கவில்லை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்யவில்லை. கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. அனைவரும், இந்த நாட்டில் வாழும் மக்கள் என்ற அடிப்படையில்தான் நாங்கள் அபிவிருத்திகளை முன்னெடுத்தோம்.

எனவே, அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றுவோம். ஏமது பிள்ளைகளுக்கு சிறந்தொரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்போம். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆரம்பிப்போம். அதற்காக அனைவரும் எங்களோடு ஒன்று சேருங்கள் என அன்பாக அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

பொதுத் தேர்தலில் ஒரு பலமான அணியோடு நாம் மீண்டெழுவோம் - நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் புத்தளம் மாவட்டம் பாரிய அபிவிருத்தியை அடைந்தது எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, இந்தப் பொதுத் தேர்தலில் ஒரு பலமான அணியோடு நாம் மீண்டெழுவோம் என்றும் கூறினார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மதுரங்குளி – கடையாமோட்டையில் நேற்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ உட்பட புத்தளம் மாவட்ட வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் உட்பட கற்பிட்டி பிரதேசத்தில் அதிக வேலைத்திட்டங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் முன்னெடுக்கப்பட்டன.கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் செய்து அந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார். இது மக்களுக்கும் நன்கு தெரியும்.அதனால்தான் நாங்கள் இன்று உங்களிடம் தைரியமாக வந்து வாக்கு கேட்கின்றோம். உங்களில் ஒருவர், உங்களோடு எப்போதும் இருக்கக் கூடிய ஒருவர், நீங்கள் அடிக்கடி சந்திக்கக் கூடிய ஒருவரை தெரிவு செய்து எமது கட்சி ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.அவரோடு சேர்ந்து நாங்கள் புத்தளம் மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவோம். இங்கு காணப்படும் அத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்கு முயற்சிப்போம்.முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த கல்வியை கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம். கல்வியில் உயர்ந்தவர்களும், கல்வியை பாதியில் விடடுச் சென்றவர்களுக்கும் தொழில்வாய்பை பெறும் சூழலை உருவாக்குவோம்.மாத்திரமின்றி, சுய தொழில் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு , மக்களின் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றிக்கு தேவையான திட்டங்களையும் அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் வழங்குவோம். மீன்பிடி மற்றும் விவசாய துறைகளை வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.இவ்வாறன நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் பலமான அணியொன்று எமக்கு தேவைப்படுகிறது. எமது கட்சியோடு இருந்து விலகியிருந்தவர்கள் இப்போது எம்மோடு இணைந்துள்ளனர்.நாங்கள் புத்தளம் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதுபோல மக்களும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எமது கட்சி வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.எங்களை இனவாதிகள் என்று சொல்கிறார்கள். இந்த நாடு இரண்டாக பிரிவதற்கும், பிளவுபடுவதற்கும் நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மக்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். நாட்டின் பற்றை வெளிப்படுத்தும் போது, அதற்கு இனவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இதுதான் அரசியல் கலாச்சாரம். இந்த உண்மையை சொல்லியே ஆக வேண்டும்.நாட்டை பிரிக்கத்தான் வேண்டும் என்று சொன்னால் பொதுஜன பெரமுன இனவாதக் கூட்டம் என்கிறார்கள். நாட்டை பிரிக்க இடமளிக்க முடியாது என்று கூறும்போதும் அதற்கும் ஒரு குழு எங்களை நோக்கி இனவாதிகள் என்று விரல் நீட்டுகிறார்கள்.நாங்கள் எந்த சமயங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. எமது கட்சியைச் சார்ந்தவர்கள், எமக்கு வாக்களிக்கவில்லை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்யவில்லை. கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. அனைவரும், இந்த நாட்டில் வாழும் மக்கள் என்ற அடிப்படையில்தான் நாங்கள் அபிவிருத்திகளை முன்னெடுத்தோம்.எனவே, அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றுவோம். ஏமது பிள்ளைகளுக்கு சிறந்தொரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்போம். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆரம்பிப்போம். அதற்காக அனைவரும் எங்களோடு ஒன்று சேருங்கள் என அன்பாக அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement