• Nov 24 2024

எதிர்வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணிகளை முன்னெடுப்போம்- இன்பராசா உறுதி..!

Sharmi / Nov 23rd 2024, 1:59 pm
image

இன விடுதலைக்காக போராடிய நாங்கள் ஜனநாயகத்தின் பாதையில் இறங்கியுள்ளோம். எனவே மக்கள் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அடுத்து வரும் உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்களில் வடகிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவோம் என்பதுடன் ஜனநாயக போராட்டத்தில் இறங்கிய நாங்கள் மக்கள் தேவைகளை உணர்ந்து அடுத்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்வோம். 

இம் முறை வடகிழக்கில் ஏழு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட்டோம்.

ஆனால் துரதிஸ்டவசமாக ஆசனங்கள் கிடைக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணிகளை முன்னெடுப்போம். 

வட கிழக்கில் கட்சியின் நிர்வாகப் பகுதியில் பல வெற்றிடங்களை நிரப்பியுள்ளோம்.

இதன் மூலம் முன்னாள் போராளிகள் இந்த ஜனநாயக நீரோட்டத்தில் இறங்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

எதிர்வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணிகளை முன்னெடுப்போம்- இன்பராசா உறுதி. இன விடுதலைக்காக போராடிய நாங்கள் ஜனநாயகத்தின் பாதையில் இறங்கியுள்ளோம். எனவே மக்கள் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அடுத்து வரும் உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்களில் வடகிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவோம் என்பதுடன் ஜனநாயக போராட்டத்தில் இறங்கிய நாங்கள் மக்கள் தேவைகளை உணர்ந்து அடுத்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்வோம். இம் முறை வடகிழக்கில் ஏழு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட்டோம்.ஆனால் துரதிஸ்டவசமாக ஆசனங்கள் கிடைக்கவில்லை.எதிர்வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணிகளை முன்னெடுப்போம். வட கிழக்கில் கட்சியின் நிர்வாகப் பகுதியில் பல வெற்றிடங்களை நிரப்பியுள்ளோம்.இதன் மூலம் முன்னாள் போராளிகள் இந்த ஜனநாயக நீரோட்டத்தில் இறங்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement