• Sep 20 2024

பகல் கனவுடன் செயலாற்றி வரும் இனவாத அரசிற்கெதிராக எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்- பொன் குணரட்ணம் தெரிவிப்பு! samugammedia

Tamil nila / May 4th 2023, 8:44 pm
image

Advertisement

பகல் கனவுடன் செயலாற்றி வரும் இனவாத அரசிற்கெதிராக எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம் என தமிழ்த்தேசியமக்கள் முன்னணி அமைப்பாளர் பொன் குணரட்ணம் தெரிவித்துள்ளார். 

தையிட்டியில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழினத்தை அடிமைப்படுத்தல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன்  அதிலிருந்து விடுபடுவதற்கு ஆயுத ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 

அவை மௌனித்த பின்னர் மீண்டும் இனவழிப்பு செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. 

அந்த வகையில் தமிழர்களின் பல நிலப்பரப்புகள் அபகரித்து விகாரைகளை கட்டி சிங்கள அரசாக மாற்றலாம் என பகல் கனவுடன் செயலாற்றி வரும் இனவாத அரசிற்கெதிராக எமது உரிமைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைதியான வழியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

அந்த வகையில் நேற்றைய தினம் தையிட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விகாரை தனியார் கணியிற்குள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

அதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற ரீதியில் ஆதரவினை வழங்கினோம்.  ஆனால் போராட்டமானது போராட்டக்கற்களிற்கு உண்பதற்கு உணவே கொடுக்க முடியாத அளவிற்கு பொலிசாரால் மிகவும் கேவலமான முறையில் அடக்கி ஒடுக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜ காண்டீபன் ஆகியோர் இங்கு வருகை தந்திருந்தனர். 

போராட்டக்கற்களிற்கான உணவுகள் மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டுவந்த வேலை பொலிசாரால் கைது செய்யப்பட்டு பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று முறைப்பாடுகள் எடுத்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை அங்கு எமது நிலைமைகள் சட்டவாளர் சுகாஷினால் தெரியப்படுத்தப்பட்ட நிலையில்,  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளோம். 

தமிழ் மக்களின் உணர்வு ரீதியான போராட்டங்களை தடுப்பதற்கு பரந்துபட்டு பார்க்கும் பொழுது எந்த  இடமுமில்லை. 

அத்தோடு எமது போராட்டத்திற்கு சாதகமான பதிலை வழங்கிய  நீதிமன்றத்திற்கு நன்றிகள் எனவும் தெரிவித்தார்.

பகல் கனவுடன் செயலாற்றி வரும் இனவாத அரசிற்கெதிராக எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்- பொன் குணரட்ணம் தெரிவிப்பு samugammedia பகல் கனவுடன் செயலாற்றி வரும் இனவாத அரசிற்கெதிராக எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம் என தமிழ்த்தேசியமக்கள் முன்னணி அமைப்பாளர் பொன் குணரட்ணம் தெரிவித்துள்ளார். தையிட்டியில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழினத்தை அடிமைப்படுத்தல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன்  அதிலிருந்து விடுபடுவதற்கு ஆயுத ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அவை மௌனித்த பின்னர் மீண்டும் இனவழிப்பு செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழர்களின் பல நிலப்பரப்புகள் அபகரித்து விகாரைகளை கட்டி சிங்கள அரசாக மாற்றலாம் என பகல் கனவுடன் செயலாற்றி வரும் இனவாத அரசிற்கெதிராக எமது உரிமைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைதியான வழியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் நேற்றைய தினம் தையிட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விகாரை தனியார் கணியிற்குள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற ரீதியில் ஆதரவினை வழங்கினோம்.  ஆனால் போராட்டமானது போராட்டக்கற்களிற்கு உண்பதற்கு உணவே கொடுக்க முடியாத அளவிற்கு பொலிசாரால் மிகவும் கேவலமான முறையில் அடக்கி ஒடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜ காண்டீபன் ஆகியோர் இங்கு வருகை தந்திருந்தனர். போராட்டக்கற்களிற்கான உணவுகள் மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டுவந்த வேலை பொலிசாரால் கைது செய்யப்பட்டு பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று முறைப்பாடுகள் எடுத்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை அங்கு எமது நிலைமைகள் சட்டவாளர் சுகாஷினால் தெரியப்படுத்தப்பட்ட நிலையில்,  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் உணர்வு ரீதியான போராட்டங்களை தடுப்பதற்கு பரந்துபட்டு பார்க்கும் பொழுது எந்த  இடமுமில்லை. அத்தோடு எமது போராட்டத்திற்கு சாதகமான பதிலை வழங்கிய  நீதிமன்றத்திற்கு நன்றிகள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement