• Nov 22 2024

ஞானசார தேரருக்கு நாம் மன்னிப்புக் கொடுக்க மாட்டோம்! – உலமா சபை உறுதி

Chithra / Jul 10th 2024, 9:03 am
image

 

மத நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த காரணம் கொண்டும் பொதுமன்னிப்பு வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று  தெஹிவளை பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த தேரருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற காரணத்தால் அதில் ஜம்மியத்துல் உலமா சபை தலையிட வேண்டிய நிலை ஏற்படாது என்றும்  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மௌலவி அப்துல் ஹாலிக் தெரிவிக்கையில்,

தேரருக்கு மன்னிப்பு வழங்கும் விடயம் எங்கள் கைகளில் இல்லை. அது ஜனாதிபதியின் கையில் உள்ளது. அது தொடர்பாக எங்களுக்கு முடிவெடுக்க முடியாது. 

சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது போன்றும் நாம் ஒரு தலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க மாட்டோம். என்று தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு நாம் மன்னிப்புக் கொடுக்க மாட்டோம் – உலமா சபை உறுதி  மத நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த காரணம் கொண்டும் பொதுமன்னிப்பு வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நேற்று  தெஹிவளை பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த தேரருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற காரணத்தால் அதில் ஜம்மியத்துல் உலமா சபை தலையிட வேண்டிய நிலை ஏற்படாது என்றும்  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மௌலவி அப்துல் ஹாலிக் தெரிவிக்கையில்,தேரருக்கு மன்னிப்பு வழங்கும் விடயம் எங்கள் கைகளில் இல்லை. அது ஜனாதிபதியின் கையில் உள்ளது. அது தொடர்பாக எங்களுக்கு முடிவெடுக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது போன்றும் நாம் ஒரு தலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க மாட்டோம். என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement