• Mar 21 2025

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் - சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு திட்டவட்டம்

Thansita / Mar 20th 2025, 7:39 pm
image


உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர் சபை, வேலணை பிரதேச சபை, வலி. கிழக்கு பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

நாம் போட்டியிடும் உள்ளூராட்சி சபைகளில் கனிசமான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். அதனூடாக எமது ஆதரவு இன்றி யாரும், சபைகளில் ஆட்சி அமைக்க முடியாது. எமது ஆரவுடனேயே ஆட்சி அமைக்க கூடிய சூழல் உருவாகும். 

எமது ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்குவதன் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த முடியும்.

கடந்த காலங்களை போல் கட்சிகளின் கபட நாடகங்களை மக்கள் இனம் காண வேண்டும். தொடர்ந்தும் கபட நாடகங்கள் ஊடாக தங்களை ஏமாற்ற அனுமதிக்க கூடாது.

நாங்கள் உள்ளூராட்சி சட்டத்தின் ஊடாக மேற்கொள்ள கூடிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.

கடந்த காலங்களில் நாம் பல உதவி திட்டங்களை எமது சொந்த பணங்களில் முன்னெடுத்தோம்.

 எமக்கு அரசியல் அதிகாரங்கள் கிடைக்கும் போது வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவோம் என தெரிவித்தனர்.

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் - சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு திட்டவட்டம் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர் சபை, வேலணை பிரதேச சபை, வலி. கிழக்கு பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.மேலும் தெரிவிக்கையில்,நாம் போட்டியிடும் உள்ளூராட்சி சபைகளில் கனிசமான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். அதனூடாக எமது ஆதரவு இன்றி யாரும், சபைகளில் ஆட்சி அமைக்க முடியாது. எமது ஆரவுடனேயே ஆட்சி அமைக்க கூடிய சூழல் உருவாகும். எமது ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்குவதன் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த முடியும்.கடந்த காலங்களை போல் கட்சிகளின் கபட நாடகங்களை மக்கள் இனம் காண வேண்டும். தொடர்ந்தும் கபட நாடகங்கள் ஊடாக தங்களை ஏமாற்ற அனுமதிக்க கூடாது.நாங்கள் உள்ளூராட்சி சட்டத்தின் ஊடாக மேற்கொள்ள கூடிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.கடந்த காலங்களில் நாம் பல உதவி திட்டங்களை எமது சொந்த பணங்களில் முன்னெடுத்தோம். எமக்கு அரசியல் அதிகாரங்கள் கிடைக்கும் போது வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவோம் என தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement