முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 44 அரசியல் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.
இன்றைய தினம்(20) நண்பகல் 12.00 மணியுடன் வேட்புமனுதாக்கல் நிறைவுக்கு வந்தது.
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் அடங்கலாக 38 அணிகள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேப்புமனு தாக்கல் செய்ததோடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும் துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புனு தாக்கல் செய்தததோடு மாந்தை கிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இதில் மொத்தமாக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
4 அணிகளின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 சுயேட்சைக் குழுக்களினதும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
பொதுஜன ஐக்கிய பெரமுன கட்சி, ஸ்ரீலங்கா மகஜன பக்சய ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்- முல்லைத்தீவு மாவட்டத்தில் 38 அணிகள் வேட்புமனுத் தாக்கல் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 44 அரசியல் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.இன்றைய தினம்(20) நண்பகல் 12.00 மணியுடன் வேட்புமனுதாக்கல் நிறைவுக்கு வந்தது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் அடங்கலாக 38 அணிகள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேப்புமனு தாக்கல் செய்ததோடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.மேலும் துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புனு தாக்கல் செய்தததோடு மாந்தை கிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.இதில் மொத்தமாக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 4 அணிகளின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 சுயேட்சைக் குழுக்களினதும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுஜன ஐக்கிய பெரமுன கட்சி, ஸ்ரீலங்கா மகஜன பக்சய ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.உள்ளூராட்சி சபைத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.