• Nov 24 2024

முகக்கவசம் அணியுங்கள் - கோவிட் வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!samugammedia

Anaath / Dec 23rd 2023, 4:58 pm
image

J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்ற நிலையில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ள்ளதுடன் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன.

ஆகவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் லக்ஸம்பேர்க் இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த J N 1 OMICRON உப பிறழ்வு தற்போது இந்தியாவில் பரவி வருகின்றது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2660 ஐ கடந்துள்மை குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் அணியுங்கள் - கோவிட் வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்ற நிலையில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ள்ளதுடன் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.மேலும் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன.ஆகவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் லக்ஸம்பேர்க் இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த J N 1 OMICRON உப பிறழ்வு தற்போது இந்தியாவில் பரவி வருகின்றது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2660 ஐ கடந்துள்மை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement