கிளிநொச்சி தர்மபுரம் விஸ்வமடு கொழுந்துபுலவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (23.12.2023) தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த நபர் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தொட்டியின் பின்புறமாக தனியாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடாவை பொலிசாரால் அளிக்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும்போலீசார் மீட்கப்பட்டுள்ளதுடன் நாளை (24.12.2023) சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்
சூட்சுமமான முறையில் வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது.samugammedia கிளிநொச்சி தர்மபுரம் விஸ்வமடு கொழுந்துபுலவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் (23.12.2023) தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த நபர் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தொட்டியின் பின்புறமாக தனியாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடாவை பொலிசாரால் அளிக்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும்போலீசார் மீட்கப்பட்டுள்ளதுடன் நாளை (24.12.2023) சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்