• Apr 02 2025

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார வெல்கம...! samugammedia

Sharmi / Jan 6th 2024, 8:34 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  களமிறங்குவதற்கு பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும்  தயாராகி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், தேர்தல் செலவை மக்கள் பொறுப்பேற்றால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு எனக்கும் தகுதி உள்ளது. ஆனால் அத்தேர்தலை எதிர்கொள்ள பண பலம் அவசியம். என்னிடம் தற்போது பணம் இல்லை எனவும் தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் மக்கள்தான் மேடை அமைப்பார்கள், போஸ்டர் ஒட்டுவார்கள். அந்த கலாசாரம் தற்போது மாறியுள்ளது. 

இவ்வாறானதொரு நிலையில் மக்கள் தேர்தல் செலவை பொறுப்பேற்றால்  ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க நான் தயார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.



ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார வெல்கம. samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  களமிறங்குவதற்கு பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும்  தயாராகி வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில், தேர்தல் செலவை மக்கள் பொறுப்பேற்றால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு எனக்கும் தகுதி உள்ளது. ஆனால் அத்தேர்தலை எதிர்கொள்ள பண பலம் அவசியம். என்னிடம் தற்போது பணம் இல்லை எனவும் தெரிவித்தார்.முன்னைய காலங்களில் மக்கள்தான் மேடை அமைப்பார்கள், போஸ்டர் ஒட்டுவார்கள். அந்த கலாசாரம் தற்போது மாறியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மக்கள் தேர்தல் செலவை பொறுப்பேற்றால்  ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க நான் தயார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement