• May 18 2024

இலங்கையில் 46 வருடங்களின் பின் ஏற்பட்ட மாற்றம்! டொலர் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

Chithra / Mar 6th 2024, 12:04 pm
image

Advertisement

 

46 வருடங்களின் பின் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றில் இன்றைய தினம்  விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பர் மாதத்தில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வட்டி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 46 வருடங்களின் பின் ஏற்பட்ட மாற்றம் டொலர் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு  46 வருடங்களின் பின் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம்  விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளது.இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பர் மாதத்தில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வட்டி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement