• May 17 2024

திடீரென முடங்கிய சமூகவலைத்தளங்கள்...! 100 மில்லியன் இழப்பை சந்தித்த 'மெட்டா' நிறுவனம்...!

Sharmi / Mar 6th 2024, 12:25 pm
image

Advertisement

உலகளாவிய ரீதியில் நேற்றையதினம்(05)  இரவு,  பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் திடீரென செயலிழந்தமையினால் 'மெட்டா' நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 'மெட்டா' நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சமூகவலைத்தளங்கள் திடீரென தடைப்பட்டமை பல்வேறு தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் தமது  தொழில் நடவடிக்கைகளும்  நேற்றையதினம் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


திடீரென முடங்கிய சமூகவலைத்தளங்கள். 100 மில்லியன் இழப்பை சந்தித்த 'மெட்டா' நிறுவனம். உலகளாவிய ரீதியில் நேற்றையதினம்(05)  இரவு,  பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் திடீரென செயலிழந்தமையினால் 'மெட்டா' நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 'மெட்டா' நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த சமூகவலைத்தளங்கள் திடீரென தடைப்பட்டமை பல்வேறு தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் தமது  தொழில் நடவடிக்கைகளும்  நேற்றையதினம் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement