இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவரை துஸ்பிரயோகம் செய்து அவருடைய பணம், தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்க யுவதியிடமிருந்து தங்க நகைகள் மற்றும் டொலர்கள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 29ஆம் திகதி கண்டியிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 25 வயதுடைய அமெரிக்க யுவதி நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த யுவதியை மருத்துவரிடம் அனுப்பி அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தடயவியல் மருத்துவரிடம் அறிக்கை பெற யுவதி மறுத்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து 2,400 அமெரிக்க டொலர்கள் 3,600 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண் சுற்றுலா பயணிக்கு இலங்கையில் ஏற்பட்ட நிலை. இருவர் கைது.samugammedia இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவரை துஸ்பிரயோகம் செய்து அவருடைய பணம், தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அமெரிக்க யுவதியிடமிருந்து தங்க நகைகள் மற்றும் டொலர்கள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 29ஆம் திகதி கண்டியிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 25 வயதுடைய அமெரிக்க யுவதி நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை குறித்த யுவதியை மருத்துவரிடம் அனுப்பி அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தடயவியல் மருத்துவரிடம் அறிக்கை பெற யுவதி மறுத்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவரிடமிருந்து 2,400 அமெரிக்க டொலர்கள் 3,600 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.