தமிழீழ வைப்பகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பலகோடி பெறுமதியாக தங்க நகைகளுக்கு நேர்ந்ததென்ன, தமது நகை தமக்கு கிடைக்கும் என தமிழ் மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் வன்னி பகுதியில் இருந்து பல கோடி பெறுமதியான தங்கங்கள் மீட்கப்பட்டு அவை கொழும்புக்கு கொண்டு வரப்பட்டன.
தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்கங்கள் பாதுகாப்பான முறையில் உரியவர்களின் பெயர் மற்றும் முகவரி குறிக்கப்பட்டு, பொதியிடப்பட்டிருந்ததாக அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் தமக்கு மீளவும் கிடைக்கும் என தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று வரை உரியவர்களுக்கு அவர்களின் தங்கம் கையளிக்கப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட தங்கங்களுக்கு என்ன நேர்ந்தது. ஏன் உரியவர்களிடம் கையளிப்படவில்லை.
உரியவர்களிடம் அவர்களின் நகைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான நகைகளுக்கு நேர்ந்ததென்ன. - கஜேந்திரன் எம்.பி கேள்வி தமிழீழ வைப்பகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பலகோடி பெறுமதியாக தங்க நகைகளுக்கு நேர்ந்ததென்ன, தமது நகை தமக்கு கிடைக்கும் என தமிழ் மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் வன்னி பகுதியில் இருந்து பல கோடி பெறுமதியான தங்கங்கள் மீட்கப்பட்டு அவை கொழும்புக்கு கொண்டு வரப்பட்டன. தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்கங்கள் பாதுகாப்பான முறையில் உரியவர்களின் பெயர் மற்றும் முகவரி குறிக்கப்பட்டு, பொதியிடப்பட்டிருந்ததாக அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது.இவ்வாறு இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் தமக்கு மீளவும் கிடைக்கும் என தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.ஆனால் இன்று வரை உரியவர்களுக்கு அவர்களின் தங்கம் கையளிக்கப்படவில்லை. கைப்பற்றப்பட்ட தங்கங்களுக்கு என்ன நேர்ந்தது. ஏன் உரியவர்களிடம் கையளிப்படவில்லை.உரியவர்களிடம் அவர்களின் நகைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.