சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன் போது 02 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட 07 பேரும் அவர்களின் உடைமைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிலாவத்துறை கடலுக்குள் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு ஏற்பட்ட நிலை.samugammedia சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன் போது 02 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட 07 பேரும் அவர்களின் உடைமைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.