• Nov 19 2024

மன்னாரில் உயிரிழந்த இளம் தாய்க்கு நிகழ்ந்தது தவறு அல்ல, குற்றம்- சுகாஷ் சீற்றம்...!

Sharmi / Aug 5th 2024, 8:30 am
image

நள்ளிரவில் குருதிப் போக்கினால் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதேயான இளம் பட்டதாரிப் பெண் திருமதி. மரியராஜ் சிந்துஜா, அடுத்த நாள் காலையில் மயங்கி விழும்வரை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணியான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அவரது முகநூலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பிறந்து சில நாட்களேயான சிசுவைத் தவிக்கவிட்டுத் தாயார் மரணித்துள்ளார். உடனடியாகச் சிகிச்சையளித்திருந்தால் நிச்சயம் அவரைக் காப்பாற்றியிருக்கலாம்.

விடுதிக்குப் பொறுப்பான வைத்தியர்கள், தங்கும் விடுதியிலிருந்தும் தாதிய உத்தியோகத்தர் அறிவித்தும் விடியும்வரை சிகிச்சையளிக்க முன்வரவில்லை. இது தவறல்ல, குற்றம்.

நீதியான - வெளிப்படையான விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அதன் மூலமே சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்பதோடு நேர்மையாகப் பணிபுரியும் வைத்தியர்களின் சேவையும் போற்றப்படும்.

இந்நிலை தொடர்ந்தால் அரசியல் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாங்கள், மருத்துவ அலட்சியங்களுக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்படும்.

எமது உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தயவுசெய்து பொறுப்போடு செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாய்க்கு நிகழ்ந்தது தவறு அல்ல, குற்றம்- சுகாஷ் சீற்றம். நள்ளிரவில் குருதிப் போக்கினால் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதேயான இளம் பட்டதாரிப் பெண் திருமதி. மரியராஜ் சிந்துஜா, அடுத்த நாள் காலையில் மயங்கி விழும்வரை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணியான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.அவரது முகநூலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிறந்து சில நாட்களேயான சிசுவைத் தவிக்கவிட்டுத் தாயார் மரணித்துள்ளார். உடனடியாகச் சிகிச்சையளித்திருந்தால் நிச்சயம் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். விடுதிக்குப் பொறுப்பான வைத்தியர்கள், தங்கும் விடுதியிலிருந்தும் தாதிய உத்தியோகத்தர் அறிவித்தும் விடியும்வரை சிகிச்சையளிக்க முன்வரவில்லை. இது தவறல்ல, குற்றம்.நீதியான - வெளிப்படையான விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அதன் மூலமே சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்பதோடு நேர்மையாகப் பணிபுரியும் வைத்தியர்களின் சேவையும் போற்றப்படும்.இந்நிலை தொடர்ந்தால் அரசியல் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாங்கள், மருத்துவ அலட்சியங்களுக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்படும்.எமது உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.தயவுசெய்து பொறுப்போடு செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement